ETV Bharat / international

உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்கும் அமெரிக்கா - ரஷ்யாவிற்கு மறைமுக பதிலடியா? - UN assembly

உக்ரைனுக்கு கிளஸ்டர் வெடிமருந்துகளை வழங்குவது குறித்த கடினமான முடிவை, சர்ச்சைக்குரிய வெடிகுண்டுகளை கவனமாகப் பயன்படுத்துவதாக உக்ரைன் உறுதியளித்ததை தொடர்ந்தே எடுத்ததாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

The US will provide cluster bombs to Ukraine and defends the delivery of the controversial weapon
உக்ரைனுக்கு கிளஸ்டர் குண்டுகளை வழங்கும் அமெரிக்கா - ரஷ்யாவிற்கு மறைமுக பதிலடியா?
author img

By

Published : Jul 8, 2023, 4:43 PM IST

வாஷிங்டன்: உக்ரைனுக்கு கிளஸ்டர் வெடிமருந்துகளை வழங்குவது குறித்த கடினமான முடிவை, சர்ச்சைக்குரிய வெடிகுண்டுகளை கவனமாகப் பயன்படுத்துவதாக உக்ரைன் உறுதியளித்ததை தொடர்ந்தே எடுத்ததாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்து உள்ளார்.

லித்துவேனியா நாட்டில் விரைவில் நேட்டோ உச்சி மாநாடு நடைபெற உள்ள நிலையில், அமெரிக்கா இந்த கடின முடிவை எடுத்து உள்ளது. இத்தகைய வெடிமருந்துகளால், இதற்குமுன் அதிக அளவிலான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ள நிலையில், நேட்டோவில் அங்கம் வகிக்கும் மூன்றில் இரண்டு பங்கு நாடுகள், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வாய்ப்பு உள்ள நிலையில், இத்தகைய கொடூர ஆயுதங்களை, ஏன் உக்ரைனுக்கு வழங்க வேண்டும் என்ற கேள்வியை அமெரிக்கா எதிர்கொள்ள வேண்டிய சூழல் உருவாகி உள்ளது.

தற்போது, உக்ரைன் நாட்டின் கைவசம் வெடிமருந்துகள் எதுவும் இல்லை என்றும், எல்லைப்பகுதிகளில் முன்னேறி வரும் ரஷ்ய நாட்டின் பீரங்கி டாங்குகளை, தற்காலிகமாக நிறுத்துவதற்கு, உக்ரைனிற்கு, இந்த கிளஸ்டர் குண்டுகள் துணைபுரியும் என்று, சிஎன்என் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குறிப்பிட்டு உள்ளார்.

ஜோ பைடனின் இந்த நடவடிக்கைக்கு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ட்விட்டரில் வரவேற்பு தெரிவித்து உள்ளார். "சரியான நேரத்தில், பரந்த மற்றும் மிகவும் தேவையான பாதுகாப்பு உதவிக்கு" பைடனுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும், இது "சர்வாதிகாரத்திற்கு எதிரான வெற்றிக்கு ஜனநாயகத்தை கொண்டு வரும்" என்று, ட்விட்டர் பதிவில் ஜெலென்ஸ்கி குறிப்பிட்டு உள்ளார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் கூறியதாவது, , "டட் ரேட்" எனப்படும் வீரியம் குறைக்கப்பட்ட வெடிமருந்துகளையே அமெரிக்கா, உக்ரைனுக்கு அனுப்ப உள்ளது.ஆனால், எத்தனை எண்ணிக்கையில் இத்தகைய வெடிமருந்துகள் வழங்குவது குறித்த தகவல் வெளியிடப்படவில்லை.

ரஷ்ய படையினர் மற்றும் அவர்களின் டாங்கிகள் தொடர்ந்து முன்னேறி உக்ரேனிய நிலப்பரப்பைக் கைப்பற்றி வருகின்றன. இதன்காரணமாக, பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளதால், இந்த கடின முடிவை, தாங்கள் எடுத்ததாக, சல்லிவன் தெரிவித்து உள்ளார்.

ஆனால் வெள்ளிக்கிழமை "இதுபோன்ற வெடிமருந்துகளின் பயன்பாடு உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், எந்த இடத்திலும் பயன்படுத்தப்படக்கூடாது" என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பின் பிரதிநிதி மார்டா ஹுர்டாடோ குறிப்பிட்டு உள்ளார்.

1998 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில் ஐந்து முறை குண்டுகள் பரிசோதிக்கப்பட்டதாகவும், வெடிக்காத டட்களின் விகிதம் 2.35 சதவீதத்திற்கும் குறைவாக இருப்பதாக அமெரிக்கா நம்புகிறது. உக்ரைனுக்கு "நூறாயிரக்கணக்கான" கிளஸ்டர் வெடிமருந்துகள் குறைந்த விலையில் கிடைக்கும் என்று அமெரிக்காவிற்கான பாதுகாப்பு கொள்கையின் செயலாளர் காலின் கவுல் தெரிவித்து உள்ளார்.

பொதுமக்கள் வசிக்கும் நகர்ப்புறங்களில் வெடிமருந்துகளைப் பயன்படுத்த மாட்டோம் என்று, உக்ரேன் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளித்துள்ளதை தொடர்ந்து, இந்த வெடிமருந்துகள் வழங்கப்பட உள்ளதாக கவுல் குறிப்பிட்டு உள்ளார்.

சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கூற்றுப்படி, உக்ரைனுக்கான விநியோகத்திற்கு 3% க்கும் குறைவான விகிதத்தில், பொதுமக்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வெடிக்காத குண்டுகள் குறைவாகவே இருக்கும் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

கிளஸ்டர் குண்டுகளைப் பயன்படுத்துவதைத் தடைசெய்யும் ஒரு மாநாட்டில் 120 க்கும் மேற்பட்ட நாடுகள் இணைந்துள்ளன, அவை ஆயுதங்களைப் பயன்படுத்தவோ, உற்பத்தி செய்யவோ, மாற்றவோ அல்லது சேமித்து வைக்கவோ மற்றும் அவற்றைப் பயன்படுத்திய பிறகு அவற்றை அழிக்கவோ ஒப்புக்கொண்டன. இதில் கையெழுத்திடாதவர்களில் அமெரிக்கா, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகியவை அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

2003 ஆம் ஆண்டு ஈராக் மீதான படையெடுப்பின் போது அமெரிக்க கொத்து குண்டுகளை கடைசியாக பெரிய அளவில் பயன்படுத்தியது. ஆனால் 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தான் மீதான படையெடுப்பின் போது அமெரிக்கப் படைகள் அவற்றை ஒரு முக்கிய ஆயுதமாகக் கருதியதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்து உள்ளது. அந்த சண்டையின் முதல் மூன்று ஆண்டுகளில், அமெரிக்க தலைமையிலான கூட்டணி, ஆப்கானிஸ்தானில் 1,500க்கும் மேற்பட்ட கிளஸ்டர் குண்டுகளை வீசியதாக மதிப்பிடப்பட்டு உள்ளதாக, பென்டகன் தெரிவித்து உள்ளது.

இலங்கை நாட்டில் 2009ஆம் ஆண்டு நடைபெற்ற உள்நாட்டுப் போரிலும், கிளஸ்டர் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதாக, அப்போது செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய துணை தூதரகம் தாக்குதல் - குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அமெரிக்க எம்.பி.க்கள் கோரிக்கை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.