தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று(மார்ச்.25) துபாய் பன்னாட்டு நிதி மையத்தில்(Dubai International Financial Centre) ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத்துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி ஆகியோரை சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழ்நாட்டில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார். எப்போதும் வெண்மை நிற வேஷ்டி, சட்டை சகிதம் இருக்கும் ஸ்டாலின், துபாய் வெளிநாட்டுப்பயணத்திற்காக, தனது ஆடைகளில் புதுமையை புகுத்தி, கோட் சூட்டுடன் வலம் வருகிறார்.
இச்சந்திப்பின்போது தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன், தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்கான இந்தியத் தூதர் சஞ்சய் சுதிர், துணைத்தூதர் டாக்டர் அமன் பூரி மற்றும் இந்தியாவிற்கான ஐக்கிய அரபு அமீரக நாட்டின் தூதர் அகமது அல் பன்னா ஆகியோர் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகையை ரூ.3 ஆயிரமாக உயர்த்த கோரிக்கை!