ETV Bharat / international

ஸ்னூஸ் பட்டனை அதிகம் பயன்படுத்துபவரா நீங்கள்? - ஆய்வு சொல்லும் அதிர்ச்சி தகவல்கள்! - ஸ்னூஸ்

அலாரத்தின் ஸ்னூஸ் பட்டனை அதிகம் பயன்படுத்துபவர்கள் நீண்டகாலமாக சோர்வாக இருப்பவர்கள் என்றும், அவர்களுக்கு மனநல பிரச்சினைகள் ஏற்படுகிறது என்றும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Study
Study
author img

By

Published : Oct 18, 2022, 10:16 PM IST

வாஷிங்டன்: காலையில் கண் விழிப்பதற்காக அலாரம் வைத்துவிட்டு, அலாரம் அடிக்கும்போது ஸ்னூஸ் பட்டனை (snooze button) அழுத்திவிட்டு தூங்குவது பெரும்பாலானோரின் பழக்கம். ஸ்னூஸ் பட்டனை அழுத்திய பிறகு கொஞ்ச நேரம் தூங்கும் அந்த விநாடிகள் ஒவ்வொன்றுமே சொர்க்கம் போல தோன்றும்.

இந்த ஸ்னூஸ் பட்டனைப் பயன்படுத்துவது தொடர்பாக அமெரிக்காவின் நோட்ரே டேம் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த ஆய்வறிக்கை ஸ்லீப் (SLEEP) என்ற பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஆய்வில் கலந்து கொண்டவர்களில் 57 சதவீதம் பேர் ஸ்னூஸ் பட்டன் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக ஆய்வின் தலைமை ஆராய்ச்சியாளரான பேராசிரியர் ஸ்டீபன் மேட்டிங்லி கூறுகையில், "ஸ்னூசிங்கை செய்யக்கூடாது என மருத்துவர்கள் நீண்ட காலமாகக் கூறி வருகிறார்கள். ஆனால், ஸ்னூசிங்கை நாம் ஏன் அடிக்கடி செய்கிறோம்? என்பது தொடர்பாக ஆய்வு செய்யப்படவில்லை.

ஸ்னூசிங் பற்றி இதுவரை நமக்குத் தெரிந்த தரவுகள் எல்லாம், தூக்கம், மன அழுத்தம் தொடர்பானவைதான். அதை ஏன் பயன்படுத்தக்கூடாது? என்று கூறுவதற்கான தரவுகளை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். ஸ்னூஸ் பட்டனைப் பயன்படுத்துபவர்கள் நீண்ட காலமாகச் சோர்வாக இருக்கிறார்கள் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவின் நோய்க் கட்டுப்பாட்டு மையத்தின் தரவுகள் படி மூன்றில் ஒருவர் மட்டுமே போதுமான அளவு தூங்குகிறார்கள், அப்படியென்றால் நம்மில் பலர் சோர்வாக இருக்கிறோம் என்று அர்த்தம்.

இந்த ஆராய்ச்சிக்காக முழு நேரம் பணிபுரியும் 450 பேரைக் கண்காணித்தோம். அவர்களின் தூக்க நேரத்தையும், இதயத்துடிப்பையும் அளவிடுவதற்காக ஒரு மெஷினை அவர்களுக்கு மாட்டி விட்டோம். அதிலிருந்து தரவுகளைச் சேகரித்தோம். அதன்படி, ஆண்களை விடப் பெண்கள் 50 சதவீதம் கூடுதலாக ஸ்னூஸ் பட்டனைப் பயன்படுத்துகிறார்கள் எனத் தெரியவந்தது.

ஸ்னூஸ் பட்டனை அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் ஆழ்ந்த உறக்கம் இல்லாமல், இடையூறுகளுடன் உறங்கும் நிலை உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இவர்கள் பல ஆண்டுகளாக பணியில் இருப்பவர்கள், உயர்ந்த படிப்புகளுடன் நல்ல வேலைகளில் இருப்பவர்கள். இந்த 450 பேரில் 57 சதவீதம் பேர் ஸ்னூஸ் பட்டன் பயன்படுத்துவதை பழக்கமாக கொண்டுள்ளனர். அதேநேரம் இந்த ஆராய்ச்சி ஒரு குறிப்பிட்ட அளவு மக்களிடையே மட்டுமே நடத்தப்பட்டது. அதனால், குறைந்த வருமானம் கொண்ட மக்களிடம் இந்த பழக்கங்கள் வேறுபடலாம். அதேபோல் உலகின் ஒட்டுமொத்த மக்கள் தொகையை ஒப்பிடும்போதும் இந்த தரவுகள் மாறலாம்.

அதேபோல் மக்கள் உறங்கச் செல்லும் நேரம், எழும் நேரம் இரண்டையுமே அடிப்படையாக வைத்தும் பார்த்தோம். அதில் இரவு தாமதமாக உறங்கச் செல்பவர்கள் அதிகளவு ஸ்னூஸ் பட்டனைப் பயன்படுத்துகிறார்கள் என்றும், அவர்கள் அதிக சோர்வுடன் இருக்கிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது" என்று கூறினார்.

ஆராய்ச்சியாளர் ஆரோன் ஸ்ட்ரைகல் கூறுகையில், "நாம் ஸ்னூசைப் பற்றிப் பேசும்போது, அலாரம் அடித்த உடனேயே எழுவது நல்லதா? என்ற கேள்வி வருகிறது. அலாரம் அடித்த உடனேயே எழுபவர்களுக்கும், இரண்டு மூன்று ஸ்னூஸ்களுக்குப் பிறகு எழுபவர்களுக்கும் என்ன வித்தியாசம்? உண்மையில் இரண்டுக்கும் பெரிய வேறுபாடு இல்லை. தூக்கமின்மை காரணமாகக் காலை எழுவதற்கு உங்களுக்கு அலாரம் தேவைப்படுகிறது என்பதுதான் பிரச்சினை" என்றார்.

மேட்டிங்கலி மேலும் கூறுகையில், "ஸ்னூஸ் செய்பவர்களும் செய்யாதவர்களும் ஒரே அளவுக்கு தூங்கலாம். ஸ்னூஸ் செய்பவர்கள் தூங்குவதால், அவர்கள் சோர்வாக இருக்கிறேன் எனக் கூறிக் கொள்ள மாட்டார்கள். ஆனால், அவர்கள் விழித்தெழுவதற்கு முன்பே ஒரு மன அழுத்தத்தை அனுபவிக்கிறார்கள். அதோடு உடலை அலெர்ட் செய்கிறார்கள்.

அலாரம் வைத்து விழிப்பது தூக்கத்தின் பலன்களைக் குலைக்கும், சோர்வாக உணர வைக்கும். உறக்கத்தில் ஆழ்ந்து 90 நிமிடங்களுக்குப் பிறகு ஏற்படும் உறக்கநிலை ஆர்இஎம் (Rapid eye movement) என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் முக்கியமான ஒன்று. இதுபோன்ற நிலையை அலாரம் வைத்து குலைத்தால், ஹார்மோன்களில் மாறுபாடுகள் ஏற்படும்.

அலாரம் அடிக்கும்போது, மூளையின் வேதியியல் செயல்பாடுகள் மூலமே கண்விழிக்கிறோம். இது உடலுக்கு எதிர்மறையானதுதான். எப்போதும் வேலை வேலை என்று ஓடுபவர்களுக்கு ஸ்னூசிங் நன்மை தரும் ஒன்றுதான். சில நேரங்களில் சிலருக்கு ஸ்னூசிங் நல்லதாக இருக்கலாம்" என்றார்.

ஸ்னூசிங்கால் ஏற்படும் உடல்நல பாதிப்புகளை அறிந்து கொள்ள மேலும் மருத்துவ ஆராய்ச்சிகள் தேவை என்று ஸ்ட்ரீகல் மற்றும் மேட்டிங்லி இருவரும் கூறினர். அனைத்தையும் தாண்டி ஒவ்வொருவரும் தங்கள் உடலுக்குத் தேவையான அளவு உறங்குவதே சிறந்த ஆலோசனை என்றும் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: இளைய தலைமுறையினருக்கு அவசியமான 5 கூடுதல் ஊட்டச்சத்துக்கள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.