ETV Bharat / international

இலங்கை திரும்புகிறார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச - ராஜபக்சவின் இளைய சகோதரர் பசில்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் அதிபர் பதவியை ராஜினாமா செய்து தாய்லாந்து தப்பியோடிய கோத்தபய ராஜபக்ச நாளை (செப்-3) இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Etv Bharatஇலங்கை திரும்புகிறார் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சே

author img

By

Published : Sep 2, 2022, 3:25 PM IST

கொழும்பு(ஸ்ரீலங்கா): இலங்கையின் பொருளாதார நெருக்கடி காரணமாக வெளியேறிய அந்நாட்டின் முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச தாய்லாந்தில் இருந்து சனிக்கிழமை நாடு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாக, உயர் பாதுகாப்பு அலுவலர் ஒருவர் AFP செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

73 வயதாகும் கோத்தபய பொருளாதார நெருக்கடியால் பொதுமக்களின் போராட்டத்தால் வலுக்கட்டயமாக இலங்கையை விட்டு வெளியேறினார். இலங்கையின் நெருக்கடிக்கு கோத்தபயவே காரணம் எனக்கூறி, பொதுமக்கள் அவரது அலுவலகத்தை கடந்த ஜூலை மாதம் ஆக்கிரமித்தனர். இதனையடுத்து ராணுவத்தின் உதவியுடன் அவர் இலங்கையை விட்டு தப்பியோடினார்.

அவர் சிங்கப்பூரில் இருந்து பாங்காக் செல்வதற்கு முன் ராஜினாமா செய்ததாக அறிவித்தார். கோத்தபயவின் வருகை குறித்து தகவல் அளித்த , கோத்தபய ஒரு கைதியாக தாய்லாந்து ஹோட்டலில் வசித்து வருகிறார். மேலும் அவருக்கு திரும்பி வர ஆர்வம் இருப்பதாகவும் கூறினார். மேலும் நாளை கோத்தபய திரும்பி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோத்தபய இலங்கை திரும்பிய பிறகு அங்கு அவரைப் பாதுகாக்க, தனியாக பாதுகாப்புப் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப்பிரிவு ராணுவம் மற்றும் காவல்துறை கமாண்டோக்களைக்கொண்டுள்ளது.

மேலும் இலங்கையின் அரசியலமைப்பின்படி, முன்னாள் அதிபர்களுக்கு மெய்ப்பாதுகாவலர்கள், வாகனம் மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றை வழங்கவும் முடிவு செய்துள்ளது. முன்னதாக சிங்கப்பூர் அரசு கோத்தபய ராஜபக்சவிற்கு 28 நாள் விசாவை நீட்டிக்க மறுத்ததை அடுத்து, கோத்தபய ராஜபக்ச தாய்லாந்து சென்றார். ஆனால், பாங்காக்கில் உள்ள பாதுகாப்பு அலுவலர்கள், அவரது சொந்தப் பாதுகாப்பிற்காக அவரது ஹோட்டலைவிட்டுவிட்டு வெளியே வர வேண்டாம் என்று தெரிவித்துள்ளனர்.

கோத்தபய ராஜபக்சவின் இளைய சகோதரர் பசில், கடந்த மாதம் தற்போதைய இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கை சந்தித்து, பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவரை நாடு திரும்ப அனுமதிக்க கோரியும் பாதுகாப்புதரக்கோரியும் கோரிக்கை விடுத்திருந்தார். இதனையடுத்து கோத்தபய இலங்கை திரும்பியதும் அவருக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தாய்லாந்தில், அவருக்கும் இன்னும் 90 நாட்களுக்கு விசா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ரூ. 23 ஆயிரம் கோடி... 40 ஆயிரம் டன் எடை... விக்ராந்த் போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு...

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.