இலங்கை: இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், அரசுக்கு எதிராக மக்கள் தீவிரமாக போராடி வருகின்றனர். கொழும்பில் உள்ள அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் அதிரடியாக புகுந்து மாளிகையை கைப்பற்றினர். அதிபர் கோத்தபய ராஜபக்சே ராஜினாமா செய்தார், பின்னர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றார்.
இதையடுத்து அதிபர் பதவிக்கு வரும் 20ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று(ஜூலை 18) முதல் அவசர நிலையை அமல்படுத்தி, இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்கே உத்தரவிட்டுள்ளார்.
அதில், பாதுகாப்புப் படையினருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைத்து பகுதிகளிலும் சோதனை நடத்தி ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்களை கைப்பற்றுதல், கைது செய்தல் போன்ற அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:அதிபர் பதவியை ராஜினாமா செய்தார் கோத்தபய - சபாநாயகருக்கு இ - மெயில் மூலம் கடிதம்