சியோல்: தென் கொரியா நாட்டில் கரோனா தொற்று பரவல் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த மூன்று நாள்களாக தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது. இதனால் அந்நாட்டு மக்கள் பீதியில் உள்ளனர். தென் கொரிய அரசும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்திவருகிறது. குறிப்பாக நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,80,803 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
அதன்பின் நேற்று 1,78,574 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. கரோனா நான்காம் அலை ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த ஆய்வில் அந்நாட்டு சுகாதாரத்துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். இன்று (ஆக்ஸ்ட் 19) 1,38,812 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக அண்டை நாடான வடகொரியவில் பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பணியில் அந்நாட்டு அரசு மும்முரம் காட்டிவருகிறது. தென் கொரியாவில் மார்ச் மாதம் ஒரே நாளில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஜிம்பாப்வேயில் தட்டம்மை நோயால் 157 குழந்தைகள் உயிரிழப்பு