ETV Bharat / international

2025க்குள் இந்தியாவிலிருந்து 180 இளநிலை மருத்துவர்களை பணியமர்த்த சிங்கப்பூர் அரசு திட்டம்! - மருத்துவ சேவை

அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து 180 இளநிலை மருத்துவர்களை பணியமர்த்த சிங்கப்பூர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

singapore
singapore
author img

By

Published : Oct 4, 2022, 7:52 PM IST

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சுகாதாரத்துறையில் உள்ள மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, வெளிநாடுகளில் இருந்து ஆள்சேர்ப்பு செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்தியா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளைச்சேர்ந்த மருத்துவர்களை தேர்வு செய்யவுள்ளது.

இதுதொடர்பாக டெண்டர் விடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியாவிலிருந்து மட்டும் ஆண்டுதோறும் 60 மருத்துவர்களை நியமிக்கப்படவுள்ளதாகவும், இத்திட்டத்தை வரும் 2025ஆம் ஆண்டு வரை தொடரவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் இருந்து 180 இளநிலை மருத்துவர்களை பணியமர்த்த சிங்கப்பூர் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த டெண்டர் வரும் 10ஆம் தேதி நிறைவடைகிறது. இந்த திட்டம் மூலம் நியமிக்கப்படும் மருத்துவர்கள், குறிப்பிட்ட நிபந்தனைகளுடனேயே மருத்துவ சேவை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தத் திட்டம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. சிங்கப்பூர் போன்ற வளர்ந்த நாடுகள், குறைவான மருத்துவ நிபுணர்கள் உள்ள நாடுகளில் இருந்து மருத்துவர்களை ஈர்ப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையும் படிங்க: பள்ளி மீது ரான்சம்வேர் தாக்குதல் - திருடிய 500 ஜிபி தகவல்களை வெளியிட்ட ஹேக்கர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.