மாஸ்கோ: ரஷ்யாவில் உள்ள பள்ளியில் இன்று (செப் 26) காலை அடையாளம் தெரியத நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 7 குழந்தைகள் உள்பட 13 பேர் உயிரிழந்தனர். 20 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து ரஷ்ய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மாஸ்கோவிற்கு கிழக்கே 960 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இசேவ்ஸ்க் நகர். இந்த நகரில் உள்ள பள்ளியில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார்.
அதனால் பள்ளியின் 7 குழந்தைகள், 2 ஆசிரியர்கள் உள்பட 13 பேர் கொல்லப்பட்டனர். அதன்பின் அடையாளம் தெரியாத நபர் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு உயிரிழந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது அந்த பள்ளியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் பலரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா, பிரேசில் நிரந்தர உறுப்பினராக ரஷ்யா முழு ஆதரவு!