ETV Bharat / international

உலக நாடுகளிடம் ரஷ்யா உதவி? பெலாரஸ், உஸ்பெகிஸ்தான் அதிபர்களுடன் புதின் பேச்சுவார்த்தை!

மாஸ்கோவை நோக்கி வாக்னர் கூலிப்படை குழு முன்னேறி வருவதாக கூறப்படும் நிலையில், பெலாரஸ், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாட்டு அதிபர்களுடன், தொலைபேசி மூலம் ரஷ்ய அதிபர் புதின் பேசியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Putin
Putin
author img

By

Published : Jun 24, 2023, 6:53 PM IST

மாஸ்கோ : ரஷ்ய தலைநகர் மாஸ்கோவை நோக்கி கூலிப்படை அமைப்பான வாக்னர் முன்னோக்கி வரும் நிலையில், பெலாரஸ், மத்தியா ஆசியாவில் உள்ள நட்பு நாடுகளின் தலைவர்களை அதிபர் புதின் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைனுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை ரஷ்ய அறிவித்தது. சிறிய நாடான உக்ரைனை எளிதில் வீழ்த்திவிடலாம் என்ற ரஷ்யாவின் எண்ணம் விரைவில் பொய்த்துப் போகும் வகையில், உக்ரைன் ஈடுகொடுத்து போர் செய்தது.

அமெரிக்கா, பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவு அளித்து தளவாடம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வந்தன. மேற்கு நாடுகளின் உதவியால் போரிட்ட உக்ரைன் போரிட்ட நிலையில், ரஷ்ய ராணுவம் பலத்த சேதத்தை காண வேண்டிய நிலை உருவானது. போரில் ரஷ்ய ராணுவத்திற்கு உதவி அந்நாட்டின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு களமிறக்கப்பட்டது.

வாக்னர் குழு உதவியுடன் உக்ரைன் தலைநகர் கீவ் சுற்றியுள்ள பகுதிகளை ரஷ்ய ராணுவம் கைப்பற்றியது. இந்நிலையில், போரில் ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக வாக்னர் குழு களமிறங்கியதை கண்டறிந்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வந்தன.

இதனால் வாக்னர் குழுவை ரஷ்ய ராணுவம் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதலில் வாக்னர் குழுவின் 2 ஆயிரம் வீரர்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால், ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக வாக்னர் குழு திரும்பி உள்ளது.

மாஸ்கோவில் ராணுவ தலைமையகத்தை கவிழ்க்க உள்ளதாக தெரிவித்த வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜின் பிரிகோஜின், ரஷ்ய ராணுவத்தின் தலைமையகமான ரோஸ்டோவை கைப்பற்றியதாக வீடியோ வெளியிட்டார். வாக்னர் குழு சொந்த நாட்டுக்கு எதிராக திரும்பியது துரோகம் என்றும், முதுகில் குத்தும் செயல் என்றும் ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்தார்.

மேலும், தாய் நாட்டிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், வாக்னர் குழுவில் உள்ள வீரர்கள் ரஷ்ய ராணுவத்தில் இணையலாம் என்றும் தெரிவித்தார். அதிபர் புதினின் அழைப்பை மறுப்பதாக தெரிவித்த வாக்னர் தலைவர் மாஸ்கோவின் ராணுவ தலைமையகத்தை வீழ்த்த உள்ளதாக தெரிவித்தார்.

தலைநகர் மாஸ்கோவில் பாதுகாப்பு தீவிரத்தன்மை அமல்படுத்தப்பட்டு உள்ள நிலையில், பல்வேறு நகரங்களில் வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். மாஸ்கோ நகர வீதிகளில் ரஷ்ய ராணுவத்தின் டாங்கிகள், வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளனர். மேலும் மாஸ்கோ நோக்கி முன்னேற முயன்ற வாக்னர் குழுவினரை ரஷ்ய ராணுவத்தின் ஹெலிகாப்டர்கள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நாட்டில் நிலவும் நிலையை சீர் செய்ய பெலாரஸ், மத்திய ஆசிய நாடுகளிடம் அதிபர் புதின் உதவி கோரியதாக தகவல் வெளியாகி உள்ளது. வாக்னர் கிளர்ச்சிக் குழுவின் ஊடுருவலை தொடர்ந்து பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுக்காஷென்கோவுடன் தொலைபேசி மூலம் அதிபர் புதின் பேசியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. ரஷ்யாவின் தற்போதைய சூழ்நிலை குறித்து பெலாரஸ் அதிபரிடம் புதின் கூறியதாகவும், அதை தொடர்ந்து பெலாரஸ் ராணுவத்தின் ஏவுதளங்களை பயன்படுத்திக் கொள்ள அந்நாட்டு அதிபர் அனுமதி அளித்ததாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல் கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் நாடுகளின் அதிபர்களுடன் அதிபர் புதின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியதாக ரஷ்ய அதிபர் மாளிகையான கிரம்ளின் தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க : மாஸ்கோ நோக்கி முன்னேற்றம்! வாக்னர் படை மீது ரஷ்ய ஹெலிகாப்டர்கள் தாக்குதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.