ETV Bharat / international

மாஸ்கோ மீது படையெடுப்பு.. முதுகில் குத்தியதா வாக்னர் குழு? புதின் ஆவேசம்! - வாக்னர் குழு மாஸ்கோ

ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி துரோகம் செய்து விட்டதாகவும் வாக்னர் குழுவின் செயல் முதுகில் குத்துவது போன்றது என்றும் கிளர்ச்சியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ரஷ்ய அதிபர் புதின் தெரிவித்து உள்ளார்.

Putin
Putin
author img

By

Published : Jun 24, 2023, 5:36 PM IST

மாஸ்கோ : ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்து கூலிப்படை அமைப்பான வாக்னர் குழுவின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் துரோகம் இழைத்துவிட்டதாகவும், ரஷ்யா மற்றும் நாட்டு மக்களை பாதுகாக்க உறுதி அளிப்பதாக அதிபர் புதின் தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா ராணுவ நடவடிக்கையை எடுத்த நிலையில், ரஷ்ய ராணுவத்திற்கு ஆதரவாக வாக்னர் தனியார் கூலிப்படை குழு போரிட்டது. இந்த கூலிப்படை அமைப்பை எவ்ஜெனி பிரிகோஜின் என்பவர் நிர்வகித்து வருகிறார். ரஷ்ய அதிபர் புதினின் மிக நெருங்கிய வட்டாரங்களில் ஒருவராக பிரிகோஜின் செயல்பட்டுவ் வந்தார்.

உக்ரைன் தலைநகர் கீவ் ஒட்டிய நகரங்களை ரஷ்ய ராணுவம் கைப்பற்ற வாக்னர் கூலிப்படை குழு வெகுவாக உதவி வந்தது. இதனை கண்டறிந்த அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் கண்டனங்களை முன்வைத்து வந்தன. உலக நாடுகளின் எதிர்ப்பை தொடர்ந்து வாக்னர் கூலிப்படை அமைப்பை, ரஷ்ய ராணுவம் கட்டுப்படுத்தி வந்ததாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் வாக்னர் குழு மீது ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக சொல்லப்படுகிறது. எதிர்பாராத தாக்குதலில் வாக்னர் குழுவைச் சேர்ந்த 2 ஆயிரம் வீரர்கள் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் ரஷ்யாவுக்கு எதிராக வாக்னர் குழு திரும்பியது. உக்ரைனை விட்டு வெளியேறிய வாக்னர் குழுவினர், மாஸ்கோவின் தெற்கு பகுதி வழியாக ரஷ்யாவில் உள்நாட்டு போரை தூண்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

ரஷ்யாவின் ரோஸ்டோவ் நகரில் உள்ள ராணுவ தலைமையகத்தை வாக்னர் குழு கைப்பற்றியதாக கூறப்படும் நிலையில், அங்கிருந்து தலைநகர் மாஸ்கோவை நோக்கி முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் ரஷ்யாவின் தலைமையகத்தை கவிழ்க்க உள்ளதாக வாக்னர் குழு தலைவர் பிரிகோஜின் வெளிப்படையாக மிரட்டல் விடுத்து உள்ளார்.

இதுகுறித்து பேசிய ரஷ்ய அதிபர் புதின், "உள்நாட்டு கிளர்ச்சியை தூண்டும் அனைவரும் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்றும், சொந்த நாட்டுக்கு எதிராக வாக்னர் குழு திரும்பி இருப்பது முதுகில் குத்தும் செயல் என்று தெரிவித்தார். ஆயுதப் படைகள் மற்றும் பிற அரசு நிறுவனங்களும் தேவையான உத்தரவுகள் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தலைநகரில் பாதுகாப்பை பலப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு உள்ளதாகவும் புதின் கூறினார்.

மாஸ்கோவில் தீவிரவாத தடுப்பு நிலை அறிவிக்கப்பட்டுள்ளது என்றும் ரோஸ்டோவில் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். இந்தச் சூழலில் ரஷ்ய மக்கள், ராணுவம், சட்ட அமைப்புகள் அனைத்தும் ஆயுதக் குழுவுக்கு எதிராக ஓரணியில் திரள வேண்டும் என்று புதின் கூறினார்.ரஷ்யா ராணுவத்துக்கு எதிராக ஆயுதம் ஏந்தி கிளர்ச்சியில் ஈடுபடும் அனைவரும் தேசத்துரோகிகள் என்றும் கிளர்ச்சியில் ஈடுபடும் அனைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.

வாக்னர் படையினர் ரஷ்ய ராணுவத்தின் முதுகில் குத்திவிட்டதாகவும், ரஷ்யாவில் உள்நாட்டு போரை அனுமதிக்க முடியாது என்றும் மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்று புதின் தெரிவித்தார்.

இதையும் படிங்க : எச்1 பி புதுப்பிப்பதில் மாற்றம்... இந்தியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.