ரஷ்யா: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து ஏற்ததாழ 9 மாதங்கள் நிறைவு பெற்றது. இந்நிலையில் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்கே ஷாய்கு(Sergei Shoigu) உக்ரைனின் கெர்சன் நகரில் இருந்து படைகளை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டார்.
கெர்சன் நகரின் இரண்டு பகுதிகளில் இருந்து உக்ரைன் ராணுவம் முன்னேறி வருவதாலும், ரஷ்யப் படைகளுக்கு ஆயுதம் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் விநியோகிப்பதில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாகவும் படைகளை திரும்பப் பெறுமாறு ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் உத்தரவிட்டார்.
முதற்கட்டமாக னீப்ரோ(Dnipro) நதி மற்றும் அதனை ஒட்டியுள்ள கெர்சன் நகரில் இருந்து படைகளை வெளியேற உத்தரவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
முக்கிய நகரான கெர்சனில் இருந்து ரஷ்யப் படைகளின் திடீர் பின்வாங்கும் முயற்சியால் போரில் திருப்புமுனை ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் கெர்சன் நகர் மற்றும் னீப்ரோ நதியை சுற்றியுள்ள பாலம் மற்றும் சாலைகள் தகர்க்கப்பட்டதால் ரஷ்யாவின் விநியோக சங்கிலி அறுபட்டு பின்வாங்கல் முடிவுக்கு வர காரணம் என உக்ரைன் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டம்பர் மாதம் முதல் கெர்சன் நகர் ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், படை விலக்கத்திற்கு பின் உக்ரைனுக்கு அதன் முக்கிய நகரம் மீண்டும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் படை விலக்கி கொள்வது போல் நாடகம் நடத்தி கெர்சன் நகரை ஓட்டுமொத்தமாக கைப்பற்ற ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக என சந்தேகிக்க தோன்றுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சென்னையில் 18 பேருக்கு ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு?