ETV Bharat / international

ட்ரோன் தாக்குதலை நிகழ்த்திய ரஷ்யா - முடித்து வைத்த உக்ரைன்: 12 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ‘பரபர’

author img

By

Published : Jul 3, 2023, 10:49 AM IST

உக்ரைனின் தலைநகரான கீவ் நகரத்தில் ரஷ்யா ட்ரோன் தாக்குதலை நடத்தி உள்ளது. ஆனால் அனைத்து ட்ரோன்களும் கண்டுபிடிக்கப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

Russia launches the first drone strike on Kyiv in 12 days and all are shot down
ட்ரோன் தாக்குதலை நிகழ்த்திய ரஷ்யா - முடித்து வைத்த உக்ரைன் : 12 நாட்களுக்கு பிறகு மீண்டும் ‘பரபர’

கீவ் (உக்ரைன்): ரஷ்யா - உக்ரைன் நாடுகளுக்கிடையேயான போரின் பரபரப்பு, சற்று தணிந்து தற்போது ஓரளவு அமைதிக்கு திரும்பி உள்ள நிலையில், உக்ரைனின் தலைநகரான கீவ் மீது ரஷ்யா ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 02) அதிகாலை ஆளில்லா விமானத் தாக்குதலை நடத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த 12 நாட்களில் நடைபெற்ற முதல் தாக்குதல் இதுவாகும்.

கீவ் நகர நிர்வாகத் தலைவர் செர்ஹி பாப்கோ தெரிவித்து உள்ளதாவது, ஈரான் நாட்டு தயாரிப்பான வெடிக்கும் வகையிலான ஷாஹத் ட்ரோன்கள் அனைத்தும் கண்டறியப்பட்டு சுட்டு வீழ்த்தப்பட்டன. கீவ் நகரத்தைத் தவிர, அதன் புறநகர் பகுதிகளும் குறிவைக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். சுட்டு வீழ்த்தப்பட்ட ஆளில்லா விமானத்தின் பாகங்கள் விழுந்து ஒருவர் காயமடைந்ததாக கீவ் மாகாண ஆளுநர் ருஸ்லான் கிராவ்சென்கோ தெரிவித்து உள்ளார்.

உக்ரைன் நகரத்தைத் தாக்கிய ட்ரோன்களின் சரியான எண்ணிக்கை வழங்கப்படவில்லை. ஆனால், உக்ரைனின் விமானப்படை, நாடு முழுவதும், எட்டு ஷாஹெட்ஸ் மற்றும் மூன்று கலிபர் ஏவுகணைகள், ரஷ்யப் படைகளால் ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

உக்ரைனின் தெற்கு கெர்சன் மாகாணத்தின் மீது நிகழ்த்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் 13 வயது சிறுவன் காயமடைந்ததாக, அம்மாகாணத்தின், உக்ரேனிய நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒலெக்சாண்டர் டோலோகோனிகோவ் கூறி உள்ளார்.

கெர்ஷன் மாகாணத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் நான்கு பேர் காயமடைந்தனர். ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட கெர்சன் மாகாணத்தில் இயங்கும் ரஷ்ய துருப்புக்களால் நகரின் குடியிருப்புப் பகுதி ஒன்று குறிவைக்கப்பட்டதாக, அப்பகுதி வழக்குரைஞர் அலுவலகம் தெரிவித்து உள்ளது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு, உக்ரைன் ராணுவமும் தொடர்ந்து பதிலடி அளித்து வருகிறது. டொனெட்ஸ்க் மாகாணத்தில உள்ள பாக்முத், மரிங்கா, லிமான் உள்ளிட்ட பகுதிகளில், 46 முறை, இருதரப்பும் கடுமையாக மோதிக் கொண்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

பாக்முத் நகரத்தின் தெற்கு மற்றும் வடக்குப் பகுதிகளில் "பெரிய தாக்குதலுக்கு" மத்தியில் உக்ரைனியப் படைகள் தொடர்ந்து முன்னேறி வருவதாக, உக்ரைனின் கிழக்குப் படைகளின் செய்தித் தொடர்பாளர் செர்ஹி செரெவதி, உக்ரைன் அரசு தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு உள்ளார்.

கடந்த 24 மணி நேரத்தில், ரஷ்யாவின் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு மற்றும் தெற்கில் உள்ள பகுதிகளை குறிவைத்து, 27 வான்வழித் தாக்குதல்கள், ஒரு ஏவுகணைத் தாக்குதல் மற்றும் 80 ராக்கெட் லாஞ்சர் தாக்குதல்களை நடத்தி உள்ளதாக, உக்ரைன் ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடற்படை வீரர்களின் செயல்களுக்கு பாராட்டி அவர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கும் பொருட்டு, கருங்கடல் பகுதியில் உள்ள துறைமுக நகரமான ஒடேஷாவுக்கு, உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலேன்ஸ்கி வந்தார். அங்கு அவர் கப்பற்படையில் ட்ரோன்களின் செயல்பாடுகள் மற்றும் ஏவுகணைத் திட்டத்தின் வளர்ச்சிக்கான அறிக்கையையும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டு உள்ளார்.

ரஷ்யாவில், உக்ரைன் எல்லையை ஒட்டிய பெல்கோரோட் பகுதியில், வான் பாதுகாப்பு அமைப்புகள் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும், அண்டை நாடான குர்ஸ்க் பகுதி ஷெல் தாக்குதல்களை எதிர்கொண்டதாகவும் உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ரஷ்ய ராணுவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, தலைநகர் மாஸ்கோவை நோக்கி படை எடுத்த வாக்னர் படைத் தலைவர் யெவ்லெனி ப்ரிகோஸின், கிளர்ச்சியை அறிவித்த விவகாரத்தில், ரஷ்ய அதிபர் புடின் அரசியல் ரீதியாக பலவீனமடைந்து வெளியே வரக்கூடும் என்று, அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ப்ரிகோஸின், ரஷ்யாவை விட்டு, பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்து உள்ள நிலையில், அதன் அண்டை நாடான போலந்து, தனது கூடுதலாக, 2 ஆயிரம் வீரர்களை, பாதுகாப்பிற்கு களம் இறக்கி உள்ளதாக தெரிவித்து உள்ளது.

இதையும் படிங்க: Twitter: எலான் மஸ்க் அறிவித்த புதிய கட்டுப்பாடுகள் - அதிர்ச்சியில் ட்விட்டர் பயனர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.