ETV Bharat / international

ருமேனியாவில் ஸ்குவாட் செய்தால், பஸ் டிக்கெட் ஃப்ரீ..!

author img

By

Published : Dec 14, 2022, 7:56 PM IST

ருமேனியாவில் ஸ்குவாட் உடற்பயிற்சி செய்தால், பேருந்து டிக்கெட் இலவசமாக வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Romania
Romania

ருமேனியா: காலநிலை மாற்றம் என்பது உலகளவில் முக்கியப் பிரச்னையாக மாறியுள்ளது. காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்த பொதுப்போக்குவரத்தை ஊக்குவிப்பது உள்ளிட்டப் பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் மேற்கொண்டு வருகின்றன.

அந்த வகையில், ருமேனியா அரசு புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டுள்ளது. அதன்படி, ஸ்குவாட் எனப்படும் உடற்பயிற்சியை 20 முறை செய்தால், பேருந்து டிக்கெட் இலவசமாக வழங்கப்படும். தனிப்பட்ட வாகனங்களைத் தவிர்த்து, பொதுமக்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்கவும், அவர்களது ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் வகையிலும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதற்கான பூத்கள் ஆங்காங்கே நிறுவப்பட்டுள்ளன. அதில், மக்கள் ஸ்குவாட் செய்வதைக் கணக்கிட கேமராவுடன் கூடிய இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது. அதன் முன்னால் நின்று ஸ்குவாட் செய்தால், அதை கணக்கிட்டு பின்னர் இலவசப் பேருந்து டிக்கெட்டை வழங்கும். இந்த திட்டத்திற்கு மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், இந்த பூத்களில் ஸ்குவாட் செய்து டிக்கெட் பெற்று, அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க: கூகுளில் அறிமுகமான புது மாற்றம்... நீங்க பார்த்தீங்களா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.