டோக்கியோ(ஜப்பான்): ஜப்பானில் நடைபெற்ற க்வாட் உச்சி மாநாட்டில் இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கிடையே க்வாட் பெல்லொஷிப் ஒப்பந்தம் தொடங்கப்பட்டது. இதன்படி இந்த மூன்று நாடுகளில் இருந்து 100 மாணவர்களுக்கு அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்( STEM ) போன்ற பாடப்பிரிவுகளின் கீழ் பட்டப்படிப்பு படிப்பதற்கான அனுமதி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மூன்று நாடுகளிடையே உறவை வலுப்படுத்த என திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த மாநாட்டில் ஜப்பான் பிரதமர் கிஷிடா, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பிடன் மற்றும் ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் ஆகியோர் குவாட் பெல்லோஷிப்பிற்கான விண்ணப்பத்தைத் திறந்து வைத்தனர். இதன் மூலம் ஒவ்வொரு ஆண்டும் 100 அமெரிக்க, ஆஸ்திரேலிய, இந்திய மற்றும் ஜப்பானிய மாணவர்கள் அமெரிக்காவில் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) துறையில் பட்டப்படிப்புகளை படிக்க நிதி உதவி கிடைக்கும் என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
-
“I encourage our students to apply for the Quad Fellowship programme and join the next generation of STEM leaders and innovators building a better future for humanity”
— Arindam Bagchi (@MEAIndia) May 24, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
A message from PM @narendramodi on the Quad Fellowship. pic.twitter.com/bEL8aYjOIs
">“I encourage our students to apply for the Quad Fellowship programme and join the next generation of STEM leaders and innovators building a better future for humanity”
— Arindam Bagchi (@MEAIndia) May 24, 2022
A message from PM @narendramodi on the Quad Fellowship. pic.twitter.com/bEL8aYjOIs“I encourage our students to apply for the Quad Fellowship programme and join the next generation of STEM leaders and innovators building a better future for humanity”
— Arindam Bagchi (@MEAIndia) May 24, 2022
A message from PM @narendramodi on the Quad Fellowship. pic.twitter.com/bEL8aYjOIs
Quad Fellowship விண்ணப்பம் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளப்பக்கத்தின் மூலம் STEM பட்டப்படிப்புகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவர் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம். க்வாட் பெல்லோஷிப்பின் முதலமாண்டு 2023 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும். கடந்த ஆண்டு செப்டம்பரில் முதன்முதலில் அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், குறிப்பாக அமெரிக்கர்கள், ஜப்பானியர்கள், ஆஸ்திரேலியர்கள், மற்றும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் இந்திய முதுநிலை மற்றும் முனைவர் பட்ட மாணவர்கள் அமெரிக்காவில் படிக்க வழிவகை செய்கிறது.
இந்த புதிய கொள்கை மூலம் தனியார் மற்றும் பொது கல்வித் துறைகளில், அவர்களின் சொந்த நாடுகளிலும், குவாட் நாடுகளிலும் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்த அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் வலையமைப்பை உருவாக்கும். குவாட் நாடுகளின் தலைவர்கள் - ஆஸ்திரேலியா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா - இன்று நான்காவது முறையாகவும் இரண்டாவது முறையாகவும் டோக்கியோவில் சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிரதமர் மோடி தலைமையில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி