ETV Bharat / international

மகாராணி 2ஆம் எலிசபெத் இறுதிச் சடங்கு... லண்டன் சென்றடைந்த திரௌபதி முர்மு... - 2ஆம் எலிசபெத் இறுதிச் சடங்கில் திரௌபதி முர்மு

இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் கலந்துகொள்ள குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு லண்டன் சென்றடைந்தார்.

President Murmu in UK to attend state funeral of Queen Elizabeth II

author img

By

Published : Sep 18, 2022, 12:46 PM IST

Updated : Sep 18, 2022, 2:28 PM IST

லண்டன்: இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத் உடல்நலக்குறைவு காரணமாக ஸ்காட்லாந்தில் செப்.8ஆம் தேதி காலமானார். அவரது உடல் லண்டன் கொண்டு செல்லப்பட்டுள்ளது. அங்கு நாளை (செப் 19) இறுதி சடங்கு நடைபெறுகிறது. இந்த சடங்கில் கலந்துகொள்ள புதிய மன்னராக பதவியேற்றுள்ள மூன்றாம் சார்லஸ் உலகத் தலைவர்களுக்கான அழைப்பு விடுத்தார். அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்பின் 2ஆம் எலிசபெத் இறுதிச் சடங்கில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி நேற்று திரௌபதி முர்மு தனி விமானம் மூலம் டெல்லியில் இருந்து லண்டன் சென்றடைந்தார். இங்கிலாந்து மகாராணி 2ஆம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சனாரோ, சீன துணை அதிபர் வாங் கிஷான், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் உள்ளிட்ட 500 உலக தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர். லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நாளை காலை 11 மணியளவில் இறுதி சடங்கு நடக்கிறது. ஒரு மணி நேர சடங்களுக்கு பின் 1 நிமிட மௌன அஞ்சலி உடன் நிறைவு பெறுகிறது.

இதையும் படிங்க: மதச்சார்பற்ற கொள்கைகளை மதிப்பேன் - இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் உறுதி

Last Updated : Sep 18, 2022, 2:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.