ETV Bharat / international

துருக்கி, சிரியா நிலநடுக்கங்கள் - 2,000ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!

துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை இரண்டாயிரத்தை நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியில் இதுவரை 1,121 பேர் உயிரிழந்துள்ளனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 6, 2023, 8:08 PM IST

சிரியா: துருக்கியில், சிரிய எல்லையை ஒட்டி அமைந்துள்ள காசியான்டேப் நகரில் இன்று காலை(பிப்.6) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.8ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கி, சிரியா இருநாடுகளிலும் கட்டடங்கள் இடிந்து விழுந்தன.

இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு சில நிமிடங்களுக்குப் பிறகு அதே பகுதியில் 6.7 ரிக்டர் அளவில் மீண்டும் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இதன் தாக்கம் சிரியா, லெபனான், ஜோர்டான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் துருக்கியில் ஒரு மருத்துவமனை உள்பட 900-க்கும் மேற்பட்ட கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில், பச்சிளம் குழந்தைகள், நோயாளிகள் என நூற்றுக்கணக்கானோர் சிக்கினர்.

அதேபோல் சிரியாவில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கங்களால் துருக்கி மற்றும் சிரியாவில் ஆயிரக்கணக்கான மக்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில் சுமார் மூன்றாயிரம் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலநடுக்கங்களால் துருக்கி மற்றும் சிரியாவில் பலியானோர் எண்ணிக்கை சுமார் 2,000-ஐ நெருங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியில் பலி எண்ணிக்கை 1,121ஆக அதிகரித்துள்ளது.

சிரியாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 780ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளிலும் இதுவரை 1,900-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகத் தெரிகிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதையும் படிங்க: துருக்கியில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.