ETV Bharat / international

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு

அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில், இந்திய அரசின் ஒத்துழைப்புடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும் என்று வாஷிங்டனில் புலம்பெயர் இந்தியர்களிடையே பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Tamil Chair to be established in University of Houston: PM Modi
அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் ‘தமிழ் ஆய்வு இருக்கை’ அமைக்கப்படும் - பிரதமர் மோடி அறிவிப்பு
author img

By

Published : Jun 24, 2023, 10:06 AM IST

வாஷிங்டன் (அமெரிக்கா): வாஷிங்டனில் புலம்பெயர்ந்த இந்தியர்களிடையே உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவப்படும் என்று தெரிவித்து உள்ளார். இந்தியாவில் முடிந்தவரை முதலீடு செய்ய இதுவே சிறந்த தருணம் என்று அவர் மேலும் குறிப்பிட்டு உள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது, “இந்தியாவில் இயன்ற அளவு முதலீடு செய்ய இதுவே சிறந்த நேரம். இந்தியாவில் கூகுளின் செயற்கை நுண்ணறிவு (AI) ஆராய்ச்சி மையம் 100க்கும் மேற்பட்ட மொழிகளில் செயல்பட உள்ளது. ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில், இந்திய அரசின் உதவியுடன் தமிழ் ஆய்வு இருக்கை நிறுவப்படும்" என தெரிவித்து உள்ளார்.

அமெரிக்கா மற்றும் இந்தியா கூட்டாக வெளியிட்டு உள்ள அறிக்கையின்படி, ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கை நிறுவப்பட இருப்பதையும், இந்தியாவின் வரலாறு மற்றும் கலாச்சாரம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் கற்பித்தலுக்காக, சிகாகோ பல்கலைக்கழகத்தில் விவேகானந்தர் இருக்கையை மீண்டும் நிறுவுவதையும் அமெரிக்க அதிபர் ஜோ பைடனும், பிரதமர் மோடியும் வரவேற்று உள்ளனர்.

கடந்த ஆண்டில் மட்டும், அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்து உள்ள நிலையில், விரைவில் அமெரிக்காவில் மிகப்பெரிய வெளிநாட்டு மாணவர் சமூகமாக மாறும் நிலையிம் இந்திய மாணவர்கள் உள்ளனர் என்று தெரிவித்து உள்ள அவர்கள், அமெரிக்காவிற்கும் இந்தியாவிற்கும் இடையே வளர்ந்து வரும் இருதரப்பு கல்வி கூட்டாண்மையை பிரதமரும் அதிபர் பைடனும் பாராட்டி உள்ளனர்.

"அமெரிக்க பல்கலைக்கழகங்களின் பிரத்யேக அமைப்பு மற்றும் இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட முன்னணி இந்திய கல்வி நிறுவனங்களின் புதிய கூட்டு பணிக்குழுவை நிறுவுவதை, இரு நாடுகளின் தலைவர்கள் வரவேற்று உள்ளனர். மேலும் ஒவ்வொரு தரப்பிலும் கவுன்சில்களின் நியமனம், ஆராய்ச்சி மற்றும் பல்கலைக்கழகத்தை விரிவுபடுத்துவதற்கான இடைக்கால பரிந்துரைகளை குறிப்பிட்டனர். இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மை" என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

செமிகண்டக்டர்கள், விவசாயத்தில் நிலைத்தன்மை, தூய ஆற்றல், சுகாதாரம் மற்றும் தொற்றுநோய்களை தடுப்பதற்கான ஆயத்த நிலை மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பிரிவுகளில் அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்பட உள்ளது.

பல்வேறு நிறுவனங்களுக்கு இடையே உள்ள ஆழமான ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் மக்களிடையே பரிமாற்றங்களை வளர்ப்பதற்காக இந்திய - அமெரிக்க நாடுகள், உலகளாவிய சவால் நிறுவனங்களை உருவாக்குவதையும் வரவேற்று உள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. முன்னதாக பிரதமர் மோடி, அரசு முறைப் பயணமாக ஜூன் 20 முதல் 24 வரை அமெரிக்கா சென்று உள்ளார்.

இதையும் படிங்க: Manipur violence: அமித்ஷா தலைமையில் இன்று அனைத்துக் கட்சிகள் கூட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.