கொழும்பு: இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று, அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகக் கோரி, கொழும்பில் ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று(ஜூலை 9) ஆயிரக்கணக்கானோர் அதிபர் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
போராட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் பாதுகாப்பு படையினர் திணறினர். பிரதமர் ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கு தீ வைக்கப்பட்டது. போராட்டத்தின் தீவிரப் போக்கை அறிந்த அதிபர் கோத்தபய ராஜபக்ச உள்ளிட்டோர் தலைமறைவாக உள்ளனர். போராட்டத்தின் போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கே இல்லம் தீவைக்கப்பட்டது.
இந்த நிலையில், நிலைமை சீராக மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என அந்நாட்டு ராணுவத் தளபதி சவேந்திரா சில்வா கோரிக்கை விடுத்துள்ளார். பொருளாதார நெருக்கடி தொடர்பாக சர்வதேச நிதியத்துடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாகவும், சர்வதேச நிதியத்தின் உதவியால் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க வாய்ப்புள்ளதாகவும் சில்வா தெரிவித்துள்ளார்.
அதனால், நாட்டில் அமைதி நிலவ, மக்கள் பாதுகாப்புப் படையினருக்கு ஒத்துழைப்பு அளித்து, அமைதி காக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: இலங்கையில் தொடர் போராட்டம் - 2 அமைச்சர்கள் ராஜினாமா