ETV Bharat / international

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் : பாகிஸ்தானின் வேண்டுகோளை மறுத்த ஓ.ஐ.சி! - இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பு

இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இந்தியாவுக்கு எதிராக இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைக்க முன்வர வேண்டும் என பாகிஸ்தானின் அறைகூவலை ஓ.ஐ.சி மறுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் விவகாரம் : பாகிஸ்தானின் வேண்டுகோளை மறுத்த ஓ.ஐ.சி!

author img

By

Published : Aug 9, 2020, 10:19 PM IST

Updated : Aug 10, 2020, 7:28 PM IST

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு தகுதி வழங்கும் சட்டப்பிரிவுகளை கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 5ஆம் தேதி மத்திய அரசு திரும்பப்பெற்றது. அத்துடன் அம்மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்டது. அதனையடுத்து மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் சட்டப்பேரவை அல்லாத லடாக் என்ற யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் என்ற தகுதிக்குள் கொண்டுவரப்பட்டது.

இதைத்தொடர்ந்து மாநிலத்தில் பல்வேறு சட்டவிதிகள் மற்றும் தடைகள் அமலுக்கு வந்தன. இணையம் மற்றும் தொலைதொடர்பு துண்டிக்கப்பட்டது. ஸ்ரீநகர் உள்ளிட்ட அம்மாநிலத்தின் பல பகுதிகள் முள்வேலிகளால் சுற்றி வளைக்கப்பட்டன. நகரத்தின் முக்கிய வழித்தடங்களில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

கடந்த ஓராண்டிற்கும் மேலாக இந்நிலை தொடர்கிறது. இதன் ஒரு பகுதியாக, அங்கு இணைய பயன்பாடுகளும் தடைசெய்யப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

இதனை எதிர்த்து வரும் பாகிஸ்தான், இந்தியாவின் ஒரு பகுதியான காஷ்மீர் தங்களுக்குரியதென அந்நாடு கூறிவருகிறது.

எதிர்ப்பின் ஒரு பகுதியாக பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மஹ்மூத் குரேஷி," காஷ்மீர் பிரச்னை தொடர்பாக விவாதிக்க இஸ்லாமிய நாடுகளை ஒருங்கிணைக்கள் வேண்டும் என இஸ்லாமிய நாடுகளின் ஒத்துழைப்பு அமைப்பை (ஓ.ஐ.சி) வலியுறுத்துகிறோம்.

இல்லையெனில் காஷ்மீர் விஷயத்தில் எங்களுடன் நிற்கத் தயாராக இருக்கும் இஸ்லாமிய நாடுகளின் கூட்டத்தை பாகிஸ்தான் அழைக்கும்.

சவூதி அரேபியாவின் வேண்டுகோளுக்கிணங்கி கோலாலம்பூர் உச்சிமாநாட்டிலிருந்து பாகிஸ்தான் விலகியது. எனவே, தற்போது இந்த பிரச்னையில் ரியாத் தலைமை காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

இந்நிலையில், காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தான் அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள சவுதி அரேபியா தயக்கம் காட்டிவருவதாக சர்வதேச செய்தி நிறுவனமான டான் வெளியிட்ட அறிக்கையை இப்போது தெற்காசிய ராஜதந்திர வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

இந்தியாவில் அதிகரித்து வரும் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல்கள், மத ரீதியிலான பாகுபாடுகளை பிரச்னையாக முன்னிறுத்தி கேள்வி எழுப்ப பாகிஸ்தான் முயற்சிகள் மேற்கொண்டதாகக் கூறப்பட்டாலும், இந்தியாவின் நட்பு நாடுகளாக ஓ.ஐ.சி கூட்டமைப்பு நாடுகள் அதனை ஏற்க மறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி இந்தியாவுக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்தால் அது தெற்காசிய பிராந்தியத்தில் உள்ள மத நல்லிணக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் என ஓ.ஐ.சி கருதுவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Last Updated : Aug 10, 2020, 7:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.