வாஷிங்டன்: அமெரிக்காவில் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நேற்று (அக். 14) உரையாற்றியிருந்தார். அதில், 1998ஆம் ஆண்டில் பாகிஸ்தான் முதன்முதலில் அணு ஆயுதங்களை சோதனை செய்யத் தொடங்கியது. மற்ற நாடுகளுடன் ஒருகிணைப்பில்லாமல் அணு ஆயுதங்களை வைத்துள்ளது.
இந்த அணு ஆயுதங்கள் பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் உள்ளூர் போராட்டகாரர்கள் கைகளில் எளிதில் சிக்கக்கூடும். இதனாலேயே உலகின் மிக ஆபத்தான நாடுகளில் ஒன்றாக பாகிஸ்தான் உள்ளது. மற்ற நாடுகள் மத்தியில் அதிருப்தி கிளம்புகிறது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடக்கிறது.
இவர்கள் பாகிஸ்தான் நாட்டிலும் அதிகாரத்தை கைப்பற்றும் சாத்தியம் உள்ளது. அப்போது நிலைமையை யோசித்து பார்க்க வேண்டும். உலகம் வேகமாக மாறி வருகிறது. பல்வேறு நாடுகள் தங்களது கூட்டாளி நாடுகளின் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். அவர்களுடனான ஒருங்கிணைப்பை மறுபரிசீலனை செய்ய வேண்டும். உலகம் நம்மைப் உற்று பார்க்கிறது என்பதை உணரவேண்டும்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மெட்டாவை பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்த்துள்ள ரஷ்யாவின் நிதி கண்காணிப்பு நிறுவனம்