ETV Bharat / international

21வது நாளாக தொடரும் போர்; காசாவில் இதுவரை 7 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

Gaza: இஸ்ரேல்-பாலஸ்தீன போரில் இதுவரை 7 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Etv Bharat
Etv Bharat
author img

By PTI

Published : Oct 27, 2023, 10:28 AM IST

காசா: கடந்த அக்டோபர் 7ஆம் தேதி, இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு வான்வழித் தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து, இஸ்ரேலும் தனது வான்வழித் தாக்குதலைத் தொடங்கியது. இவ்வாறு இரு தரப்பும், தொடர்ந்து இன்றும் (அக்.27) போரை முடிவுக்கு கொண்டு வரவில்லை.

இதற்கு ஐ.நா. சபை தனது கடும் கண்டனத்தை தெரிவித்தது மட்டுமல்லாமல், நிவாரண உதவிகளையும் வழங்கி வருகிறது. இதனிடையே, இந்தியா, அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அது மட்டுமல்லாமல், அமெரிக்கா இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளையும் வழங்கி வருகிறது.

மேலும், அமெரிக்க பிரதமர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மாக்ரோன் உள்ளிட்ட உலகத் தலைவர்கள், நேரடியாக இஸ்ரேலுக்குச் சென்று இஸ்ரேல் பிரதமர் மற்றும் அதிபர் உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதேநேரம், இந்தியா தரப்பில் பாலஸ்தீனத்துக்கு நிவாரணப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு இந்திய விமானப் படைக்குச் சொந்தமான விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டது.

இதனிடையே, ‘ஆபரேஷன் அஜய்’ என்ற திட்டத்தின் மூலம், இஸ்ரேலில் சிக்கித் தவித்த இந்தியர்கள் இதுவரை ஆறு கட்டங்களாக சிறப்பு விமானம் மூலம் இந்தியா அழைத்து வரப்பட்டு, அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே, போரில் உயிர், உடமை மற்றும் குடியிருப்புகளை இழந்த மக்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் உள்பட பல்வேறு தன்னார்வல அமைப்புகள் உதவிக்கரம் நீட்டி வருகின்றன.

இந்த நிலையில், வடக்கு காசா பகுதியில் பெரும் அளவு சேதம் அடைந்து உள்ளதாக சேட்டிலைட் வரைபடம் வாயிலாக அறிய முடிகிறது. மேலும், காசா எல்லைப் பகுதியில் 1,400 இஸ்ரேல் மக்கள் கொல்லப்பட்டு உள்ளனர். மேலும், பாலஸ்தீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தரப்பில், இதுவரை காசா பகுதியில் 7 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: அமெரிக்காவில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு; 10க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு - பலர் படுகாயம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.