அபுஜா: ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் தென் மாநிலங்களான இமோ மற்றும் ரிவர்ஸுக்கு இடையேயான எல்லைப் பகுதியான எக்பெமாவில் கடந்த வெள்ளிகிழமை (ஏப்.22) சட்டவிரோதமாக நடைபெற்று வந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ஏற்பட்ட வெடி விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து பேசிய பெட்ரோலிய வள ஆணையர் குட்லக் ஓபியா "சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 100க்கும் மேற்பட்டோர் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்தனர்" என்று கூறியுள்ளார். மேலும், சின்ஹுவா ஓபியா என்பவர் கூறுகையில் “அடையாளம் தெரியாத எரிந்த உடல்கள் அப்பகுதியில் சிதறிக் கிடக்கின்றன. இந்த ஆலையை நடத்த ஆபரேட்டர் தேவைப்படுவதாக அரசாங்கம் ஏற்கனவே அறிவித்தது. யாரால் இந்த ஆலை இயக்கப்பட்டது எனத் தெரியவில்லை” என்றார்.
இமோ மற்றும் ரிவர்ஸ் மாநிலங்களுக்கு இடையே உள்ள காட்டில் திடீரென வெடிச்சத்தம் கேட்டது. அப்பகுதி முழுவதும் அடர்ந்த புகை சூழ்ந்துள்ளது. இதுவரை 108 எரிந்த உடல்கள் எண்ணப்பட்டுள்ளன. யாரும் கனவில் கூட காணாத சோகம் இது. இத்தகைய சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் எண்ணெய் நிறுவனங்களுக்குச் சொந்தமான குழாய்களில் இருந்து கச்சா எண்ணெயைத் திருடுவதன் மூலம் செயல்படுகின்றன.
நைஜீரியாவில் எண்ணெய் குழாய் நாசம் செய்தல் மற்றும் எண்ணெய் திருட்டு ஆகியவை அடிக்கடி நடக்கின்றன. இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது.
இதையும் படிங்க:18ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!