லண்டன்: பிஏ.4.6 வகை ஒமைக்ரான் வைரஸ் அமெரிக்காவில் வேகமாகப்பரவி வருகிறது. கடந்த வாரத்தில் அமெரிக்காவில் ஏற்பட்ட ஒமைக்ரான் பாதிப்புகளில் 8 விழுக்காடு பாதிப்புகள் பிஏ.4.6 வகை வைரஸால் ஏற்பட்டது. இந்த நிலையில், பிஏ.4.6 வகை ஒமைக்ரான் வைரஸ் இங்கிலாந்திலும் பரவத்தொடங்கியுள்ளது.
இங்கிலாந்தில் அண்மையில் ஏற்பட்ட பாதிப்புகளில் 9 விழுக்காடு பாதிப்புகள் இந்த உருமாறிய பிஏ.4.6 வகை ஒமைக்ரான் வைரஸால் ஏற்பட்டன.
பிஏ.4.6 வகை ஒமைக்ரான் வைரஸ்
- பிஏ.4 வகை ஒமைக்ரான் வைரஸின் மரபணு உருமாற்றத்தால் பிஏ.4.6 வைரஸ் உருவானது.
- பிஏ.4 வகை முதல்முதலில் கடந்த ஜனவரி 2022ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டது.
- கரோனா வைரஸின் இரண்டு வகை வைரஸ்கள் ஒரே நபரை, ஒரே நேரத்தில் தாக்கும்போது இந்த பிஏ.4.6 வைரஸ் உருவாகியிருக்கலாம் எனத்தெரிகிறது.
- பிஏ.4 வகை ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பால் குறைவான இறப்புகளே ஏற்படுகின்றன. அதன் தாக்கம் மோசமானதாக இல்லை. ஆனால், அதன் உருமாற்றமான பிஏ.4.6 வைரஸ், பிஏ.4 வகை வைரஸை விட அதிகப்பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
- தற்போது பயன்படுத்தப்படும் கரோனா தடுப்பூசிகள், பிஏ.4.6 வகை ஒமைக்ரான் வைரஸுக்கு எதிராக வீரியத்துடன் செயல்படவில்லை.
- பிஏ.4.6 வகை மற்றும் பல உருமாற்ற வைரஸ்கள் உருவாகக்கூடும். இவற்றால் மோசமான பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க தடுப்பூசி செலுத்துவதே ஒரே வழி.
இதையும் படிங்க:கொடூரமான செய்திகளை விரும்புகிறீர்களா...அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்