ஸ்டாக்ஹோம்(சுவீடன்): 2022ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு இன்று(அக்.3) முதல் அறிவிக்கப்படுகின்றன. அதன்படி முதல் நாளான இன்று மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோவுக்கு மருத்துவத்துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அழிந்துபோன மனித இனங்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணாமம் குறித்த கண்டுபிடிப்புகளுக்காக நோபல் பரிசு வழங்கப்படவுள்ளதாக நோபல் பரிசுக்குழு அறிவித்துள்ளது. நியாண்டர்டால்கள் மற்றும் டெனிசோவன்களின் மரபணுவை ஒப்பிடும் ஆராய்ச்சியை பாபோ முன்னெடுத்துள்ளார்.
இதைத்தொடர்ந்து, இயற்பியலுக்கான நோபல் பரிசு நாளையும், வேதியியலுக்கான பரிசு அக்டோபர் 5ஆம் தேதியும், இலக்கியத்துக்கான பரிசு வரும் 6ஆம் தேதியும், அமைதிக்கான பரிசு வரும் 7ஆம் தேதியும் அறிவிக்கப்படவுள்ளன. பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு வரும் வரும் 10ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.
இதையும் படிங்க: 2021 மருத்துவத்திற்கான நோபல் பரிசை வென்ற இருவர்