ETV Bharat / international

உக்ரைன் போரை ராஜதந்திரம் மூலம் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் - பிரதமர் மோடி - Ukraine and the global problems

உக்ரைன் போரை ராஜதந்திரம் மூலம் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, தூதரக வழியில் சுமூக தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நான் மீண்டும் வலியுறுத்துவதாக பிரதமர் மோடி ஜி20 உச்சிமாநாட்டில் தெரிவித்தார்.

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
author img

By

Published : Nov 15, 2022, 3:20 PM IST

இந்தோனிசியாவின் பாலியில் ஜி20 உச்சிமாநாடு இன்று (நவம்பர் 15) தொடங்கியது. இந்த மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகையில், பருவநிலை மாற்றம், கரோனா பெருந்தொற்று, உக்ரைனில் நடைபெறும் போர் மற்றும் அதனுடன் தொடர்புடைய உலகளாவிய பிரச்சினைகள் உள்ளிட்டவை உலகம் முழுவதும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளன. சர்வதேச விநியோக சங்கிலிகள் அழிந்து வருகின்றன. உலகம் முழுவதும் அத்தியாவசிய மற்றும் அடிப்படை தேவை உள்ள பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அனைத்து நாடுகளின் ஏழை குடிமக்கள் சந்திக்கும் சவால்கள் இன்னும் மோசமாகி விட்டன. ஐக்கிய நாடுகள் போன்ற பல்வேறு அமைப்புகளும் இதுபோன்ற பிரச்சனைகளைத் தீர்ப்பதில் வெற்றி பெறவில்லை என்பதை ஒப்புக் கொள்ள தயங்கக் கூடாது. இதற்கான தகுந்த சீர்திருத்தங்களைக் கொண்டுவர நாம் அனைவரும் தவறிவிட்டோம். ஆகவே இன்று ஜி20 மாநாட்டின் விளைவுகள் குறித்து உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டிருப்பதோடு, நமது குழு அதிக முக்கியத்துவத்தையும் பெற்றுள்ளது.

  • At the @g20org Summit this morning, spoke at the session on Food and Energy Security. Highlighted India’s efforts to further food security for our citizens. Also spoke about the need to ensure adequate supply chains as far as food and fertilisers are concerned. pic.twitter.com/KmXkeVltQo

    — Narendra Modi (@narendramodi) November 15, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

உக்ரைன் போரை ராஜதந்திரம் மூலம் உடனடியாக முடிவுக்குக் கொண்டு வந்து, தூதரக வழியில் தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். கடந்த நூற்றாண்டில் இரண்டாவது உலகப் போர், சர்வதேச அளவில் சீரழிவை ஏற்படுத்தியது. போருக்குப் பிறகு, அப்போதைய தலைவர்கள் அமைதியை ஏற்படுத்த தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டனர். தற்போது நமது முறை வந்துவிட்டது. கரோனா காலகட்டத்திற்குப் பிறகு புதிய உலக ஒழுங்குமுறையை உருவாக்கும் பொறுப்பு நம் கையில் உள்ளது.

உலகெங்கும் அமைதி, இணக்கம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, நிலையான மற்றும் கூட்டு உறுதிப்பாடுகள், காலத்தின் தேவை. புத்தர் மற்றும் காந்தி பிறந்த புனித பூமியில் ஜி20 கூட்டம் அடுத்தாண்டு நடைபெறும்போது அமைதி குறித்த வலுவான செய்தியை உலகிற்கு தெரிவிக்க நாம் அனைவரும் ஒப்புக் கொள்வோம் என்று நான் நம்புகிறேன். பெருந்தொற்றான்போது 1.3 பில்லியன் மக்களுக்கு உணவு பாதுகாப்பை இந்தியா உறுதி செய்தது. அதே நேரத்தில் பல்வேறு நாடுகளுக்கு உணவு தானியங்களும் விநியோகிக்கப்பட்டன.

உலகளவில் மிக வேகமாக வளரும் பொருளாதாரமாக விளங்கும் இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு சர்வதேச வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. எரிசக்தி சந்தையில் ஆற்றல் மற்றும் நிலைத்தன்மையின் விநியோகத்திற்கு எந்த கட்டுப்பாடுகளையும் நாம் ஊக்குவிக்கக் கூடாது. தூய்மையான எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் என்பதில் இந்தியா உறுதி பூண்டுள்ளது. 2030ஆம் ஆண்டில், நமது மின்சாரத்தில் சுமார் பாதி அளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும். கால நிர்ணயம் மற்றும் மலிவான நிதி மற்றும் தொழில்நுட்பத்தின் நிலையான வழங்கல் ஆகியவை உள்ளடக்கிய ஆற்றல் மாற்றத்திற்கு அவசியம் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: கம்போடியா பிரதமருக்கு கரோனா உறுதி - ஜி20 மாநாட்டில் பங்கேற்காமல் திரும்பினார்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.