ETV Bharat / international

200க்கும் மேற்பட்ட ட்விட்டர் ஊழியர்கள் பணி நீக்கம்; எலான் மஸ்க் அதிரடி - ட்விட்டர்

ட்விட்டரின் புதிய தலைவரான எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கையாக 200க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார்.

200க்கும் மேற்பட்ட ட்விட்டர் ஊழியர்கள் பணி நீக்கம் ; எலான் மஸ்க் அதிரடி நடவடிக்கை

author img

By

Published : Nov 4, 2022, 6:55 PM IST

சமீபத்தில் ட்விட்டர் தலைவரான எலான் மஸ்க், 200க்கும் மேற்பட்ட ட்விட்டர் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளார்.

இன்று(நவ.4) காலை சில ஊழியர்கள் தங்களது லேப்டாப்பில் பணிபுரிய உள்செல்ல(Log -in) முனைந்தபோது (ட்விட்டரில் இன்றும் வீட்டில் இருந்தபடி வேலைபார்க்கும்(WFH) பணி தொடர்கிறது), அவர்களது முகப்பு நிராகரிக்கப்பட்டதும், அவர்களை பணிநீக்கம் செய்துள்ளதும் தெரிய வந்துள்ளது.

ட்விட்டரில் பணிபுரியும் ஊழியர்கள், கடந்த வாரம் ட்விட்டரின் தலைவராக எலான் மஸ்க் பதவியேற்றதும் பின் தங்களுக்கும் தங்களது மூத்த அலுவலர்களுக்கும் இடையேயான தகவல் பகிர்தலில் சிக்கல் ஏற்பட்டு வந்ததாக, சில ஊழியர்கள் புகார் தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கை நடத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் கூறுகையில், “எங்களை இப்படி தகர்ப்பது மனிதத் தன்மையற்றது. பல ஆண்டுகளாக ட்விட்டரில் பணிபுரிந்து வந்த நாங்கள் தற்போது மஸ்கின் தலைமையில் எந்த வித முன் தகவலுமின்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளோம்” என வேதனைத் தெரிவித்தனர்.

மேலும், மொத்தமாக பணிபுரியும் 7,600 ஊழியர்களை பாதியாகக் குறைக்க வேண்டுமென புதிய தலைவரான எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ட்விட்டர் அலுவலகமும் தற்போது தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: வாட்ஸ்அப்பின் சூப்பர் அப்டேட்: குரூப்பில் இனி 1,024 பேர் வரை - மெட்டா அதிரடி அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.