ETV Bharat / international

Twitter Logo: ட்விட்டர் லோகோ மாற்றம் - தொடரும் மஸ்க்கின் அலப்பறைகள்! - டாஜ் என்றால் என்ன

ட்விட்டர் நிறுவனத்தின் லோகோ தீடிரென மாற்றப்பட்டு உள்ளது. குருவி பறப்பது போல் இருந்த லோகோ மாற்றப்பட்டு அதற்கு ஷிபா இனு எனப்படும் நாய், லோகாவாக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.

Twitter
Twitter
author img

By

Published : Apr 4, 2023, 7:50 AM IST

வாஷிங்டன் : பிரபல சமூக வலைதளமான ட்விட்டரின் லோகோவை அதன் உரிமையாளர் எலான் மஸ்க் திடீரென மாற்றி உள்ளார். குருவி பறப்பது போல் இருந்த லோகோவிற்கு பதிலாக எலான் மஸ்க்கால் பிரபலப்படுத்தப்பட்ட நாய் உருவத்தை லோகோவாக வைக்கப்பட்டு உள்ளது.

கோடிக்கணக்கிலான பயனர்களுடன் ட்விட்டர் சமூக வலைதளம் இயங்கி வருகிறது. கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் பணம் கொடுத்து உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் விலைக்கு வாங்கினார். ட்விட்டர் நிறுவனத்தை கைப்பற்றியது முதல் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.

திடீர் பணியாளர் நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன் வரை ட்விட்டர் நிறுவனம் ஸ்தம்பித்து காணப்பட்டது. இதனால் பல்வேறு விமர்சனங்களை எலான் மஸ்க் எதிர்கொண்டார். இதையடுத்து ட்விட்டர் கணக்கு உள்ளவர்களுக்கு ப்ளூ டிக் வழங்குவதற்கு பணம் வசூலிக்கத் தொடங்கினார்.

இதில் ஆங்கில நாளிதழான நியூயார்க் டைம்ஸ், ப்ளூ டிக் பெற ட்விட்டர் நிறுவனத்திற்கு பணம் தர இயலாது என திட்டவட்டமாக தெரிவித்தது. இது சமூக வலைதள பயனர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், ட்விட்டர் நிறுவனத்தின் லோகோவை அதன் உரிமையாளர் எலான் மஸ்க் மாற்றம் செய்து உள்ளார்.

ட்விட்டர் லோகோவில் இருந்த நீல நிற குருவிக்கு பதிலாக நாய் லோகோவாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டுள்ளது. Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

ட்விட்டர் லோகோவை மாற்றியது குறித்த மீம்ஸ்களை தன் பக்கத்தில் வெளியிட்டு எலான் மஸ்க் விளக்கம் கொடுத்து உள்ளார். கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதிவாக்கில் ட்விட்டர் லோகோ மாற்றம் குறித்த பயனருடன் கலந்துரையாடியாது தொடர்பான புகைப்படங்களை எலான் மஸ்க் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

பிட்காயின் போன்று டாஜ்காயினும் ஒரு வகை இணையதள பணமாகும். நகைச்சுவையாக பணம் செலுத்தும் முறையை ஊக்கப்படுத்தும் வகையில் மென்பொருள் பொறியாளர்களான பில்லி மார்கஸ் மற்றும் ஜாக்சன் பால்மர் ஆகியோரால் இந்த டாஜ் காயின் உருவாக்கப்பட்டது குறிப்பிடத்தகது. இந்த காயினை எலான் மஸ்க் விளம்பரப்படுத்தி பல்வேறு நிதி சார்ந்த மோசடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

எலான் மஸ்க் மீதும் வழக்குகள் தொடரப்பட்டன. இந்நிலையில், டாஜ் காயினை பிரபலப்படுத்தும் நோக்கில் எலான் மஸ்க் இறங்கி உள்ளாரா என்ற கேள்வி ட்விட்டர் பயனர்களிடையே எழுந்து உள்ளது. மேலும் திடீர் ட்விட்டர் லோகோ மாற்றத்தால் அதன் பயனர்கள் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்து உள்ளனர்.

இதையும் படிங்க : விமான டிக்கெட் விலையேறுமா? - நாடாளுமன்றக் குழு ஆலோசனை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.