கலிஃபோர்னியா: அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் உள்ள வாட்சன்வில்லி நகர விமான நிலையத்தில் இரண்டு சிறிய ரக விமானங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது. செஸ்னா 340 என்னும் இரட்டை என்ஜின் விமானத்தில் இரண்டு விமானிகளும், செஸ்னா 152 என்னும் ஒற்றை என்ஜின் விமானத்தில் ஒருவரும் இருந்துள்ளனர். விமானநிலையத்தில் தரையிறங்கும்போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
மூவரில், இரண்டு பேர் உயிரிழந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும், அமெரிக்க நேரப்படி ஆக. 18ஆம் தேதி மாலை 3 மணியளவில் விபத்து நிகழ்ந்ததாகவும் வாட்சன்வில்லி மாநகரின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்தவர்களை தவிர்த்து வேறு யாருக்கும் பாதிப்பில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் இந்த விபத்து குறித்து பொதுமக்களால் புகைப்படங்களும், வீடியோக்களும் பதிவிடப்படுகின்றன.
-
“Multiple fatalities after mid-air plane crash at Watsonville airport. City officials say it happened as the 2 #planes were trying to land around 3 pm.” Multiple people dead after two planes collide over Watsonville, #California. pic.twitter.com/lAtgk6UrwD
— Prateek Pratap Singh (@PrateekPratap5) August 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">“Multiple fatalities after mid-air plane crash at Watsonville airport. City officials say it happened as the 2 #planes were trying to land around 3 pm.” Multiple people dead after two planes collide over Watsonville, #California. pic.twitter.com/lAtgk6UrwD
— Prateek Pratap Singh (@PrateekPratap5) August 19, 2022“Multiple fatalities after mid-air plane crash at Watsonville airport. City officials say it happened as the 2 #planes were trying to land around 3 pm.” Multiple people dead after two planes collide over Watsonville, #California. pic.twitter.com/lAtgk6UrwD
— Prateek Pratap Singh (@PrateekPratap5) August 19, 2022
அதில், விமான நிலையத்தில் விமானம் ஒன்று சிதலமடைந்து கிடக்கிறது. மற்றொரு வீடியோவில், விமான நிலையத்தின் அருகாமையில் இருந்து புகைமூட்டம் காணப்படுகிறது. விமானநிலைய கட்டடம் ஒன்று சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: குரங்கம்மை தொற்று 20 விழுக்காடு அதிகரிப்பு... 92 நாடுகளில் பரவல்... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...