ETV Bharat / international

நைஜீரியாவில் வெள்ளத்தில் தத்தளிக்கும் 1.5 கோடி குழந்தைகள்...!

நைஜீரியாவின் பருவநிலை மாற்றத்தால் அந்நாட்டில் பெருவாரியான மக்கள் பல்வேறு விதங்களில் பாதிப்படைந்துள்ளனர்.

நைஜீரியாவில் வெள்ளத்தில் தத்தளிக்கும்
நைஜீரியாவில் வெள்ளத்தில் தத்தளிக்கும்
author img

By

Published : Oct 23, 2022, 4:01 PM IST

நைஜீரியா(அபுஜா): கடந்த 10 ஆண்டுகளாக நீடித்து வரும் வெள்ளத்தால் 2.5 கோடி பேர் பல்வேறு விதங்களில் பாதிப்படைந்துள்ளனர். அந்நாட்டிலுள்ள 36 மாநிலங்களில் 34 மாநிலங்களைப் பாதித்துள்ள இந்த வெள்ளத்தால் 1.3 கோடி பேர் புலம்பெயர்ந்துள்ளனர். 600 பேர் உயிரிழந்துள்ளனர். 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

டையரியா போன்ற நீரினால் வரும் நோய்கள், நுரையீரல் பிரச்சனைகள், தோல் நோய்கள் போன்ற பாதிப்புகள் அதிகரித்துள்ளதாக யூனிசெப் தெரிவித்துள்ளது. வட - கிழக்கு போர்னோ பகுதிகளிலுள்ள அடமவ மற்றும் யோப் ஆகிய இடங்களில் மட்டும் 7,485 பேர் காலரா நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 319 பேர் உயிரிழந்துள்ளனர். இன்னும் சில வாரங்களுக்கு மழை நீடிக்குமெனக் கருதப்படுவதால் மக்களும் உதவியை நாடி காத்திருக்கின்றனர்.

ஏற்கனவே வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த வெள்ளம் அதை மேலும் மோசமாக்கியுள்ளது. குழந்தைகளின் உடல்நலம், தண்ணீர், உணவு, இருப்பிடம், தூய்மை, சுகாதாரம் ஆகியவற்றைப் பாதுகாக்கச் சரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டியுள்ளது.

அதற்கு மேற்படி நிதியுதவிகளும், மனித உதவிகளும், தேவைப்படுகிறது. மேலும், நைஜீரியா தற்போது உள்ள பருவநிலை மாற்றத்தால் பெரும் ஆபத்தான சூழ்நிலையில் உள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும், இங்குள்ள குழந்தைகளுக்கு இந்த நாட்டின் பருவ நிலை மாற்றத்தால் அடிப்படைத் தேவைகளை அடையமுடியாத நிலை, கல்வியின்மை என அனைத்தும் ஆபத்தான சூழலாகவே இருந்து வருகிறது.

இதையும் படிங்க: நியூயார்க் பள்ளிகளில் தீபாவளிக்கு விடுமுறை... பிரியங்கா சோப்ரா வரவேற்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.