ETV Bharat / international

Threads app: ட்விட்டருக்கு மாற்றாக களமிறங்கிய மெட்டாவின் "த்ரெட்ஸ்" - தமிழ் எழுத்தின் 'கு' வடிவில் லோகோ! - எலான் மஸ்க்

ட்விட்டருக்கு மாற்றாக த்ரெட்ஸ் செயலியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இன்ஸ்டாகிராமை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள த்ரெட்ஸ் செயலியின் பல அம்சங்கள் ட்விட்டரை ஒத்திருப்பதால், இந்த செயலி எலான் மஸ்கிற்கு தலைவலியாக மாறக்கூடும் எனத் தெரிகிறது.

Meta
மெட்டா
author img

By

Published : Jul 6, 2023, 2:40 PM IST

லண்டன்: உலகப் பெரும் பணக்காரர்களில் ஒருவருரான எலான் மஸ்க், கடந்த ஆண்டு பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை 44 பில்லியன் டாலர் விலை கொடுத்து வாங்கினார். ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பிறகு, எலான் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். ஊழியர்கள் பணிநீக்கம், ப்ளூ டிக்கிற்கு கட்டணம் உள்ளிட்டப் பல நடவடிக்கைகளை எடுத்தார். அதேபோல், ட்விட்டர் பயனர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்தார். அதில் உச்சகட்டமாக அண்மையில் ட்விட்டர் பதிவுகளை படிப்பதற்கும் கட்டுப்பாடு விதித்தார்.

அதன்படி, சந்தா செலுத்திய அதிகாரப்பூர்வ பயனாளர்கள் ஒரு நாளைக்கு 6 ஆயிரம் பதிவுகளையும், சந்தா செலுத்தாமல் நீண்ட நாட்களாக டிவிட்டரை பயன்படுத்துவர்கள் ஒரு நாளைக்கு 600 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என அறிவித்தார். சந்தா செலுத்தாமல், புதிதாக ட்விட்டர் கணக்கு தொடங்குபவர்கள் ஒரு நாளைக்கு 300 பதிவுகளை மட்டுமே படிக்க முடியும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்புக்கு உலகளவில் உள்ள ட்விட்டர் பயனர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

ட்விட்டர் நிறுவனம் கட்டுப்பாடுகளை விதிக்கத் தொடங்கியது முதலே ட்விட்டர் பயனர்களும் தங்களது அதிருப்தியைத் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டனர். இந்த சூழலைப் பயன்படுத்தி பல நிறுவனங்களும் ட்விட்டருக்கு மாற்றாக ஒரு சமூக வலைதளத்தை உருவாக்க முயற்சி மேற்கொண்டன.

அதில், குறிப்பாக மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் ட்விட்டருக்குப் போட்டியாக ஒரு வலைதளத்தை உருவாக்கி வருவதாக தகவல் வெளியானது. அதனை மார்க் ஜூக்கர்பெர்க்கும் அண்மையில் உறுதி செய்தார். இன்ஸ்டாகிராமை மையமாகக் கொண்டு இயங்கும் "த்ரெட்ஸ்" (Threads) என்ற தளத்தை உருவாக்கி இருப்பதாகவும், அது விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என்றும் அறிவித்தார்.

அதன்படி, த்ரெட்ஸ் செயலி இன்று(ஜூலை 6) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழ் எழுத்தின் 'கு' வடிவில் அதன் லோகோ உள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், இந்தியா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த த்ரெட்ஸ் செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த தளம் ட்விட்டரைப் போலவே முழுவதும் டெக்ஸ்ட்டை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் என தெரிகிறது.

இதில் பயனர்கள் டெக்ஸ்ட் மூலம் தங்களது கருத்தை தெரிவிக்கலாம், அதுவும் 500 எழுத்துகள் வரை கருத்துப் பதிவிடலாம் என தெரிகிறது. அதேபோல், 5 நிமிடங்கள் வரையிலான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களையும் பதிவுகளுடன் பகிரலாம். இன்ஸ்டாகிராமில் கணக்கு உள்ளவர்கள், அதே யூசர்நேமை வைத்து இந்தச் செயலில் லாகின் செய்து பயன்படுத்தலாம் - இன்ஸ்டாகிராமில் கணக்கு இல்லாதவர்கள் புதிய இன்ஸ்டா கணக்கை தொடங்கி, அதன் பிறகு த்ரெட்ஸ் செயலியைப் பயன்படுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த த்ரெட்ஸ் செயலி ட்விட்டருக்கு தலைவலியாக மாறக்கூடும். ட்விட்டரில் கருத்துப் பதிவிட 280 எழுத்துகள் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், த்ரெட்ஸ் செயலி 500 எழுத்துகள் வரை அனுமதிக்கிறது. மேலும், த்ரெட்ஸ் செயலியின் பல அம்சங்கள் ட்விட்டரைப் போலவே இருப்பதால், ட்விட்டர் பயனர்கள் த்ரெட்ஸ் செயலியை நோக்கிச் செல்ல வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ட்விட்டரின் 'ட்வீட் டெக்' வசதி இனி இந்தப் பயனர்களுக்கு மட்டும் தான்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.