ஹராரே: ஜிம்பாப்வேயின் மணிக்கலாண்ட் மாகாணத்தில் கடந்த ஏப்ரல் மாதம் தட்டம்மை நோய் பதிவாகியது. அதைத்தொடர்ந்து பல்வேறு மாகணங்களுக்கு நோய் பரவியது. இதுவரை 2,056 பேருக்கு தட்டம்மை நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளே அதிகம்.
இதனால் அந்நாட்டு அரசு தட்டம்மைக்கு எதிரான தடுப்பூசி முகாம்களை அமைத்தது. ஆனால், பல்வேறு மாகாணங்களில் உள்ள பழங்குடியின மக்கள் தங்களது பாரம்பரியம், நம்பிக்கைகளை காரணம்காட்டி தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுத்துவிட்டனர்.
இதன் விளைவாக தட்டம்மை நோயால் பாதிக்கப்பட்ட 157 குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதனால் அரசு ஒவ்வொரு மாகாணங்களிலும் மருத்துவ முகாம்களை அமைத்து, தட்டம்மை அறிகுறிகாளான காய்ச்சல், இருமல், தோல் வெடிப்பு உள்ளவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று தடுப்பூசி செலுத்தும் பணியை தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: குரங்கம்மை தொற்று 20 விழுக்காடு அதிகரிப்பு... 92 நாடுகளில் பரவல்... உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை...