ETV Bharat / international

தமிழக பாரம்பரியம்; இலங்கையில் முதல் முறையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி..! - international tamil news

Sri Lanka Jallikattu: தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டுப் போட்டி, இலங்கையில் முதல் முறையாக இன்று (ஜன.05) தொடங்கப்பட்டுள்ளது.

jallikattu competition held for the first time in sri lanka
முதல் முறையாக இலங்கையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 5:00 PM IST

இலங்கை: தமிழகம் முழுவதும் வருடந்தோறும் தை மாதம் முதல் நாள் கொண்டாடப்படும் பொங்கல் விழாவின் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் ஆகிய இடங்களில் உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறும்.

  • #WATCH | Sri Lanka's first Jallikattu event began at Trincomalee today. 200 bulls are expected to participate here. More than 100 police personnel are deployed for security.

    The event was inaugurated by Senthil Thondaman, the Governor of Eastern Province and Malaysian MP M.… pic.twitter.com/zkxtzwINB2

    — ANI (@ANI) January 6, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல தமிழகத்தின் உள்ள வேறு ஒருசில மாவட்டங்களிலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வருடந்தோறும் வெகு விமரிசையாக்க ஜல்லிக்கட்டுப் போட்டிகள் கொண்டாடப்படுவது வழக்கம். இத்தகைய சூழ்நிலையில், இலங்கையில் முதல் முறையாக ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.05) தொடங்கியுள்ளது.

மேலும், ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் சுற்றுலாத் துறை சார்பில் அங்கே பொங்கல் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரம் இந்த பொங்கல் விழா நடக்கும் நிலையில், முதல் நாளான இன்று (ஜன.05) காலை 10.30 மணிக்குத் திரிகோணமலை, சம்பூர் பகுதியில் அமைந்துள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டைமான், அமைச்சர்கள் மற்றும் திரைப்பட நடிகர் நந்தா உள்ளிட்டோர் கலந்து கொண்டு கொடி அசைத்து ஜல்லிக்கட்டு போட்டியைத் தொடங்கி வைத்தனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 200 காளைகளும், சுமார் 100க்கும் மேற்பட்ட மாடு பிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.

இதையும் படிங்க: வாணியம்பாடியில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் தொடங்கிய தமிழர் பண்பாட்டுத் திருவிழா..!

மேலும், இந்த போட்டிக்குத் தேவையான கேலரி, விழா மேடை, இரும்பு தடுப்புகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. இலங்கையில் முதல்முறையாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றுள்ள நிலையில், அதைக் காணப் பலரும் திரிகோணமலைக்கு வருகை தந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக பாரம்பரிய விளையாட்டான இந்த ஜல்லிக்கட்டு போட்டி தோன்றிய தமிழகத்தில், 2024ஆம் ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த தச்சங்குறிச்சியில் இன்று (ஜன.06) கோலாகலமாகத் தொடங்கியது.

மேலும், மதுரை மாவட்டத்தில் நடைபெறும் இந்த வருடத்திற்கான ஜல்லிக்கட்டு போட்டி, திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள அவனியாபுரத்தில் பொங்கல் தினமான 15ஆம் தேதியும் இதேபோல, பாலமேடு பேரூராட்சியில் மஞ்சமலை ஆறு திடலில் மாட்டுப் பொங்கல் தினத்தன்று 16ஆம் தேதியும் மற்றும் அதற்கு மறுநாள் அலங்காநல்லூர் பேரூராட்சியில் கோட்டைமுனி வாசல் மந்தை திடலில் 17ஆம் தேதியும் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தச்சங்குறிச்சியில் துவங்கியது முதல் ஜல்லிக்கட்டு போட்டி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.