நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பை, அதன் உறுப்பு நாடுகள் மாதந்தோறும் ஏற்பது வழக்கம். அந்த வகையில் டிசம்பர் மாதத்தில் இந்தியா ஐநா சபையின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதனிடையே ஐநா தலைமையகத்தில் மகாத்மா காந்தியின் மார்பளவு சிலை திறந்து வைக்கப்பட்டது.
கடந்த மார்ச் 2021ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் 75ஆவது அமர்வில் 2023ஆம் ஆண்டை ‘சர்வதேச திணை ஆண்டு’ (IYM 2023) என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று (டிசம்பர் 15), வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், ஐநா சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டெரஸ் உள்பட ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளின் உறுப்பினர்களை தினை அடிப்படையிலான மதிய விருந்துக்கு (Millet Lunch) அழைப்பு விடுத்திருந்தார்.
இதனை ஏற்ற அனைத்து உறுப்பினர்களும் நியூயர்க்கில் நடைபெற்ற தினை விருந்தில் கலந்து கொண்டனர். இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சர்வதேச தினை ஆண்டு 2023க்கு நாம் செல்லும்போது, அவற்றின் அதிக உற்பத்தி, நுகர்வு மற்றும் உற்பத்திக்குத் தேவையான உலகளாவிய உணவுப் பாதுகாப்புக்கு உதவும்.
மேலும் விவசாயத்தில் நிலைத்தன்மையை மேம்படுத்தும். மேன்மை மிகுந்த இந்த தினை மதிய உணவு விருந்துக்கு ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அண்டோனியா குட்டெரஸ் உள்பட ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளை மனதார வரவேற்கிறேன்’ என பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: "இந்தியா, யுஏஇ நட்புறவால் மாறி வரும் உலகத்தை வடிவமைக்க முடியும்" - EAM ஜெய்சங்கர்!