தெஹ்ரான்: ஈரான் நாடு முழுவதும் ஹிஜாப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடந்துவரும் சூழலில் ஈரான் நடிகையான தாரனே அலிதூஸ்டி பொய்யான தகவலை பரப்பியதாக அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட தகவல் பொய்யானது என்றும் அதற்கான ஆதாரங்கள் அவரிடம் கிடையாது என்றும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
ஆஸ்கர் விருது பெற்ற ‘தி சேல்ஸ்மேன்’ திரைப்படத்தில் நடித்தவர் தாரனே அலிதூஸ்டி. ஈரான் போராட்டக்காரார் மொஹ்சென் ஷேகரி அரசால் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டதை எதிர்த்து அவர் கருத்து தெரிவித்திருந்தார். அதில் “அனைத்து சர்வதேச அமைப்புகளும் இந்த ரத்த வெல்லத்தைப் பார்த்தும். எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது.
இது மனித நேயத்திற்கே அவமானம் என்று பதிவிட்டிருந்தார். இதன் காரணமாக 8 மில்லியன் ஃபாலோவர்களை கொண்ட அவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டது. ஷேகாரி டிச.9ஆம் தேதி தெஹ்ரான் தெருக்களில் சாலை மறியல் நடத்தியதற்காகவும், காவல் படைகளை தாக்கியதற்காகவும் தூக்கிலிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நடிகை அலிதூஸ்டி ஈரானிய அரசையும் காவல்துறையையும் தொடர்ந்து விமர்சித்துவருகிறார். 2018ஆம் ஆண்டு ஈரானிய காவல்துறை ஹிஜாபை அவிழ்த்ததற்காக பெண் ஒருவரை கடுமையாக தாக்கியதாக குற்றம்சாட்டியிருந்தார். இதற்காக கைது செய்யப்பட்டு 6 மாதங்கள் சிறையில் இருந்தார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானிடம் அணு ஆயுதமிருப்பதை இந்தியா மறந்துவிடக் கூடாது: ஷாஜியா மர்ரி எச்சரிக்கை