ETV Bharat / international

டச்சு நோபல் பரிசு பெற்ற இந்திய வம்சாவளி பேராசிரியை ஜோயீதா குப்தா!

Dr Joyeeta Gupta: இந்திய வம்சாவளி பேராசிரியையான முனைவர் ஜோயீதா குப்தா, தனது காலநிலை மாற்றம் தொடர்பான பணிக்காக மதிப்புமிக்க விருதான ஸ்பினோசா பரிசைப் பெற்றுள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 12:16 PM IST

நெதர்லாந்து: இந்திய வம்சாவளியினரான முனைவர் ஜோயீதா குப்தா, ஆம்ஸ்டெர்டம் பல்கலைக்கழ்கம் மற்றும் நீர் படிப்புக்கான ஐஹெச்இ டெஃப் தொழில்நுட்பத்தில் சுற்றுச்சூழல் மற்றும் உலகளாவிய தெற்கின் பேராசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்றைய முன்தினம் (அக்.4) தி ஹாக்கில் நடைபெற்ற விழாவில், டச்சு ஆராய்ச்சி கவுன்சிலால் வழங்கப்பட்ட மிக உயரிய விருதான ஸ்பினோசா பரிசைப் பெற்றார்.

இந்த விருது ‘டச்சு நோபல்’ பரிசு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த நிலையில், இது தொடர்பாக பாராட்டைப் பகிந்த நெதர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம், “டச்சு ஆராய்ச்சி கவுன்சிலால் வழங்கப்பட்ட மதிப்புமிக்க ஸ்பினோசா பரிசைப் பெற்ற முனைவர் ஜோயீதா குப்தாக்கு வாழ்த்துகள். டச்சு அறிவியலில் ஜோயீதா ஆற்றிய தனித்துவமான பணிக்காக அவருக்கு மிக உயர்ந்த விருது அளிக்கப்பட்டுள்ளது” என தனது X வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது. மேலும், இந்த பரிசோடு, 1.5 மில்லியன் யூரோவும் (இந்திய மதிப்பில் ரூ.13 கோடி) வழங்கப்படும்.

இதையும் படிங்க: ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ஆர்பிஐ கவர்னர் சக்திகாந்த தாஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.