ETV Bharat / international

'சத் பூஜை' கொண்டாடிய அமெரிக்க வாழ் இந்தியர்கள்.. - சத் பூஜை கொண்டாடிய அமெரிக்க வாழ் இந்தியர்கள்

அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் சத் பூஜையை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 31, 2022, 2:18 PM IST

Updated : Oct 31, 2022, 2:41 PM IST

அமெரிக்காவில் பீகார், ஜார்கண்ட் அசோசியேஷன் ஆஃப் வட அமெரிக்கா (BJANA) என்ற அமைப்பு கலிபோர்னியா, அரிசோனா, கனெக்டிகட், மாசசூசெட்ஸ், நியூ ஜெர்சி, டெக்சாஸ், வட கரோலினா மற்றும் வாஷிங்டன் டிசி உட்பட பல மாநிலங்களில் 'சத் பூஜை' திருவிழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதன்படி, நேற்று (அக்.30) நடந்த சத் பூஜையில் தாம்சன் பார்க், மன்ரோ, நியூ ஜெர்சி உட்பட்ட பகுதிகளில் 1,500 உறுப்பினர்கள் கொண்டாடினர். முன்னதாக, ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு BJANA அமைப்பினர் சிறப்பாக இவ்விழாவைக் கொண்டாடி இருந்தது.

'ஒவ்வொரு ஆண்டும் புலம்பெயர்ந்தவர்களால் இந்த விழா கொண்டாடி வருகிறோம். முன்னதாக, நாங்கள் 5 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் சத் பூஜையைக் கொண்டாடிய நிலையில் தற்போது வரை அதிக எண்ணிக்கையில் எங்கள் அமைப்பில் இணைந்துள்ளனர். இன்று 1500-க்கும் மேற்பட்டோர் இதனைக் கொண்டாடினர்' என்று BJANA-ன் சமூக உறுப்பினர் வந்தனா வத்ஸ்யன் கூறினார். சூரிய பகவானுக்காகக் கொண்டாடப்படும் இப்பண்டிகை பீகார், ஜார்கண்ட், கிழக்கு உத்தரபிரதேசத்தில் மிகவும் பிரபலான ஒன்று. இதனைக் கொண்டாடுவதன் மூலம் சூரியனிடம் ஆசீர்வாதம் பெற்று, பூமியில் உயிர்களை நீண்ட காலத்திற்கு வாழ வழிசெய்யும் என்று நம்பப்படுகிறது.

அதன்படி, நியூஜெர்சியில் இவ்விழாவில் பங்கேற்ற ராஜ்யசபா நாடாளுமன்ற உறுப்பினர் பீடா மஸ்தான் ராவ் யாதவ் இதுகுறித்து பேசுகையில், 'பீகார், சத்தீஸ்கர், ஜார்கண்ட் மற்றும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர்கள் சத் பண்டிகையை மரியாதையுடனும் பாரம்பரியமாகவும் கொண்டாடியதைப் பார்க்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. அமெரிக்காவில் நடக்கும் இக்கொண்டாட்டத்தில் நானும் ஒருவனாக இருப்பதில் மகிழ்ச்சி என்றார்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா வைரஸ் தொற்று காரணமாக மக்கள் குறைந்த எண்ணிக்கையில் திரண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் விழாக்களில் கலந்து கொண்டனர். சத் பண்டிகை என்பது, இந்தியாவின் பீகார், ஜார்கண்ட், உத்திரபிரதேச மாநில மக்களால் பூமியில் மனிதர்கள் வாழ்வதற்கான வளங்களை அளிக்கும் சூரியனுக்கு நன்றி செய்யும் விதமாகும். விரதம் இருந்து புனித நீராடி வழிபாடு செய்வது வழக்கம்.

இதையும் படிங்க: குரூப் சேட்களுக்கு ‘end to end encryption' சோதனையைத் தொடங்கியது கூகுள்

Last Updated : Oct 31, 2022, 2:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.