ETV Bharat / international

சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவது நிறுத்தம் - இந்தியா அதிரடி

இந்தியாவிற்கான சுற்றுலா விசாவை சீனர்களுக்கு வழங்குவதை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாக சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அதன் உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளது.

சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவது நிறுத்தம்

author img

By

Published : Apr 24, 2022, 6:46 PM IST

டெல்லி: சீனர்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை இந்தியா நிறுத்தி வைத்துள்ளதாக, சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு ஏப்ரல் 20ஆம் தேதி தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு கரோனா தொற்று பரவத்தொடங்கிய போது, சீனாவில் படித்துக் கொண்டிருந்த இந்திய மாணவர்கள் நாடு திரும்பினர்.

கரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், சீனப் பல்கலைக்கழகங்களில் படித்து வரும் 22,000 இந்திய மாணவர்கள் நேரடி வகுப்புகளுக்குச் செல்ல முடியாமல் தவித்துவருகின்றனர். இதுகருதி ஒன்றிய அரசு மாணவர்கள் சீனாவிற்குச்செல்ல அனுமதி அளிக்கும்படி அந்நாட்டிடம் வலியுறுத்தி வந்தது. ஆனால், சீனா அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதாகத்தெரிகிறது. இதையடுத்து இந்தியா இந்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை குறித்து சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் ஏப்ரல் 20ஆம் தேதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "சீன நாட்டினருக்கு வழங்கப்பட்ட சுற்றுலா விசா இனி செல்லுபடியாகாது. 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் சுற்றுலா விசாவும் இனி செல்லாது. பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம் ஆகிய நாடுகளைச்சேர்ந்த பயணிகள் மட்டும் இந்தியா வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சீனாவிடம் வலியுறுத்தல்: இந்திய அரசால் வழங்கப்பட்ட குடியிருப்பு அனுமதி அட்டை, இந்திய விசா அல்லது இ-விசா, இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் அட்டை, வெளிநாடு வாழ் இந்தியர் அட்டை வைத்திருக்கும் பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 17ஆம் தேதி இந்திய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி சீனாவிடம் கூறுகையில், "கடும் கட்டுப்பாடுகள் தொடர்ந்து அமல்படுத்தப்பட்டுவருவதால், ஆயிரக்கணக்கான இந்திய மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தகுந்த நிலைபாட்டை எடுக்குமாறு சீன அரசினை இந்தியா வலியுறுத்தியது" என்றார்.

இந்தியாவுக்கு மறுப்பு: முன்னதாக பிப்ரவரி 8ஆம் தேதி சீன வெளியுறவு அமைச்சக செய்திததொடர்பாளர் பாக்சி கூறுகையில், "சீனா இது குறித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டு மாணவர்களை சீனாவுக்கு அனுமதிப்பது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

ஆனால், இந்திய மாணவர்களை அனுமதிப்பது குறித்து சீனத் தரப்பு எந்த திட்டவட்டமான பதிலையும் வழங்கவில்லை. மாணவர்களின் நலனுக்காக இணக்கமான நிலைப்பாட்டை எடுக்க சீனத் தரப்பை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம்" என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஜம்மு-காஷ்மீர் சென்றடைந்தார் பிரதமர் மோடி!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.