பாகிஸ்தானில் பொருளாதார சீர்கேடு, பணவீக்கம், விலை வாசி உயர்வு உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் காரணமாக அந்நாட்டு பிரதமர் இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என்று நாடு முழுவதும் போராட்டங்களும், எதிர்ப்புகளும் கிளம்பின. இதனிடையே இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டுவந்தன.
குறிப்பாக இம்ரான் கானின் பிடிஐ (பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப்) கட்சி உறுப்பினர்களே அவருக்கு எதிராக வாக்களிப்பார்கள் என்று கூறப்பட்டது. இந்த நிலையில், பிடிஐ கட்சிக்கு அளித்த ஆதரவை எம்கியூஎம் (முத்தாஹிதா குவாமி இயக்கம்) கட்சி விலக்கிக்கொள்வதாகவும், எதிர்க்கட்சியான பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாகவும் அறிவித்துள்ளது. இதனால், இம்ரான்கானின் கட்சி பெரும்பான்மை இழந்துள்ளது.
பாகிஸ்தான் நாட்டில் மொத்தம் உள்ள 342 உறுப்பினர்களில் பெரும்பான்மைக்கு 172 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஆனால், எம்கியூஎம் கட்சி விலகலை தொடர்ந்து இம்ரான் கான் தலைமையிலான அரசாங்கம் 164 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது. எதிர்க்கட்சிகள் 177 உறுப்பினர்களை கொண்டுள்ளது. மேலும் கூட்டணி இல்லாமல் பிடிஐ கட்சிக்கு மட்டும் 155 பேர் உறுப்பினர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எனக்கு எதிராக வெளிநாட்டு சதி.. கதறும் இம்ரான் கான்!!