ETV Bharat / international

யுனெஸ்கோவின் சிறந்த நகரங்களின் பட்டியலில் இணைந்த இந்தியாவின் இரண்டு நகரங்கள்! அது எது தெரியுமா? - news in tamil

UNESCO Creative Cities Network: உலகின் சிறந்த 55 நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து குவாலியர் மற்றும் கோழிக்கோடு நகரங்களை ஐநாவின் யுனெஸ்கோ அமைப்பு தேர்ந்தெடுத்து உள்ளது.

யுனெஸ்கோவின் சிறந்த நகரங்களின் பட்டியலில் இணையும் கோழிக்கோடு, குவாலியர்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 1, 2023, 12:48 PM IST

டெல்லி: உலகின் சிறந்த 55 நகரங்கள் பட்டியலில் இந்தியாவில் இருந்து மத்திய பிரதேசத்தின் குவாலியர் மற்றும் கேரளாவின் கோழிக்கோடு நகரங்களை தேர்ந்தெடுத்து ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. உலக நகரங்கள் தினத்தை முன்னிட்டு இந்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த ஆண்டிற்கான சிறந்த நகரங்கள் பட்டியலில் 55 நகரங்களை புதிதாக சேர்த்துள்ளதாக ஐக்கிய நாடுகளின் யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவில் இருந்து குவாலியர் மற்றும் கோழிக்கோடு சிறந்த நகரங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் தங்களது வளர்ச்சியில் கலச்சாரம் மற்றும் புதுமையை ஒன்றிணைத்து இயங்குவதாகவும், மேலும் நகர்ப்புற வளார்ச்சிக்கு திட்டமிட்டு புதுமையான நடைமுறைகளைக் கொண்டு வந்துள்ளன என்றும் யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்து உள்ளது.

முன்னதாக உலகளவில் 295 நகரங்கள் உலகின் சிறந்த நகரங்களின் (UNESCO Creative Cities Network-UCCN) பட்டியலில் இடம் பெற்றுள்ளன. இந்நிலையில், மேலும் 55 நகரங்களை சிறந்த நகரங்களாக யுனெஸ்கோவின் இயக்குநர் ஆட்ரி அசோலே குழு உலக சிறந்த நகரங்கள் தினத்தில் தேர்ந்தெடுத்து வெளியிட்டு உள்ளது.

இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இரண்டு நகரங்களில், குவாலியர் சிறந்த 'இசை' கலச்சாரத்தை பெற்றிருப்பதாகவும், கோழிக்கோடு 'இலக்கியம்' பிரிவில் இடம் பிடித்து உள்ளதாகவும் யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. இசை மற்றும் இலக்கியம் அடிப்படையில் இரண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

புகாரா கைவினைப் பொருட்கள் , காசாபிளாங்கா மீடியா ஆர்ட்ஸ், சோங்கிங் டிசைன், காத்மாண்டு திரைப்படம், ரியோ டி ஜெனிரோ இலக்கியம், உலன்பாதர் கைவினைப் பொருட்கள் மற்றும் நாட்டுப்புறக் கலைகளை அடிப்படையாக கொண்டு 55 நகரங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

யுனெஸ்கோவின் கிரியேடிவ் சிட்டீஸ் அமைப்பு, நகரங்களை 7 துறைகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கும் என அறிக்கையில் வெளியிட்டது. அதில் கைவினை மற்றும் நாட்டுப்புற கலை, வடிவமைப்பு, திரைப்படம், உணவு, இலக்கியம், ஊடகக் கலை மற்றும் இசை என கூறப்பட்டது.

மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்கள் 2024 ஜூலை மாதம் போர்ச்சுகலில் நடக்கவிருக்கும் யுனெஸ்கோவின் கிரியேடிவ் சிட்டீஸின் மாநாடில் பங்கெடுக்க அழைப்பு விடுத்துள்ளது. நடக்கவிருக்கும் யுனெஸ்கோ மாநாடின் கருப்பொருளாக அடுத்த 10 ஆண்டிற்கு இளைதலைமுறைகளை முன்னிருத்தும் விதமாக தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: இந்தியர்கள் தாய்லாந்து செல்ல இனி விசா தேவையில்லை.. பின்னணி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.