மிசிசிப்பி: அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் வசித்து வரும் எவரிட்(68) என்பவர், கடந்த 4 ஆண்டுகளாக செல்லப்பிராணியாக 'பண்டிட்' என்ற பூனையை வளர்த்து வந்தார். கடந்த 25ஆம் தேதி எவரிட் வீட்டில் கொள்ளையர்கள் திருட முயற்சித்தனர்.
கொள்ளையர்கள் இருவர் வீட்டின் பூட்டை உடைப்பதை அறிந்த பூனை பண்டிட், அறையில் உறங்கிக்கொண்டிருந்த எவரிட்டின் மீது ஏறிக்குதித்து அவரை எழுப்பியுள்ளது. பூனை விடாமல் தொந்தரவு செய்ததையடுத்து எவரிட் எழுந்து சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டின் கதவை இரண்டு பேர் திறக்க முயற்சித்தனர்.
அதில் ஒருவரின் கையில் துப்பாக்கியும் இருந்தது. இதைக்கண்ட எவரிட் வெளியே சென்றபோது, அவர்கள் தப்பியோடிவிட்டனர். இதனால் அங்கு நடைபெறவிருந்த அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.
"பண்டிட் இல்லாமல் இருந்திருந்தால், எனக்கு என்ன நடந்திருக்கும் என்று நினைத்துப்பார்க்க முடியவில்லை. பண்டிட்டால் மட்டுமே நான் காப்பாற்றப்பட்டேன். பண்டிட் எனது பாதுகாவலன்" என்று எவரிட் கூறினார்.
இதையும் படிங்க:வீடியோ: அமெரிக்காவின் கலிபோர்னியா காட்டுத் தீயின் டைம் லேப்ஸ்