ஜெனீவாவில் நடந்த ஐ.நா.மனித உரிமைகள் கழக கூட்டத்தில் இலங்கையின் தற்போதைய நெருக்கடி மற்றும் அரசியல் விவகாரங்கள் குறித்து இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி இந்திரா மணி பாண்டே பேசினார். அப்போது இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடியை கையாள இந்தியா கடைப்பிடித்த நிலைப்பாடு கடந்த காலத்தை விட வலுவானது எனத் தெரிவித்தார்.
இருப்பினும் இலங்கைத்தமிழர்கள் உள்ளிட்ட இனப்பிரச்னைக்கான அரசியல் தீர்வு விவகாரத்தில் அந்நாட்டு அரசால் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் இருப்பது கவலையளிக்கிறது.
அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்துதல், மாகாண சபைகளுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துதல் போன்ற அரசியல் தீர்வுகளை இலங்கை அரசு முன்னெடுக்க வேண்டும் என்று இந்தியா எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: மகாராணி 2ஆம் எலிசபெத்துக்காக மெக்காவில் யாத்திரை... ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் கைது...