உலகம் முழுவதும் பல இடங்களில் தந்தையர் தினம் இன்று (ஜூன் 19) கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை சிறப்பிக்கும் விதமாக கூகுள் நிறுவனம் இதற்கென பிரத்யேக டூடலை வெளியிட்டுள்ளது. ஜூன் மாதத்தில் வரும் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையே தந்தைகள் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இருப்பினும் ஒரு சில நாடுகளில் மற்றொரு நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது.
தந்தைகளின் தியாகத்தையும் அவர்களது அன்பையும் பெருமைபடுத்துவதற்காக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. இது ஐரோப்பிய நாடுகளில் முதன் முதலில் கடைபிடிக்கப்பட்டது. முன்னதாக இந்த தினம் மார்ச் 19 அன்று கொண்டாடப்பட்டதாக சில தரவுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தினம் ஜோசப் எனும் பாதிரியார் நினைவாக தொடங்கப்பட்டது எனவும் ஒரு தகவல் உள்ளது.
1910 ஆம் ஆண்டு முதல் ஜூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிற்றுக் கிழமை கொண்டாட்டும் முறை அறிமுகமானது. உலகம் முழுவதும் இந்த தினம் பல்வேறு காரணங்களுக்காக மாறுபட்ட தினங்களில் கொண்டாடத் தொடங்கப்பட்டாலும், தற்போது அப்பாக்களின் அன்பிற்கு நன்றி சொல்லும் தினமாக கொண்டாடப்படுகிறது. தந்தை என்ற உறவின் மகத்துவத்தையும், அதன் தியாகங்களையும் அறிந்து அதற்கு சிறப்பு சேர்ப்பதே ஒவ்வொரு குழந்தைகளின் கடமை ஆகும்.
இதையும் படிங்க:ஸ்டெபானியா மெராசினியானு; ரோமானிய இயற்பியலாளரின் பிறந்தநாளுக்கு டூடுல் வெளியிட்ட கூகுல்!