ETV Bharat / international

அடேங்கப்பா... உலக பணக்காரர்கள் பட்டியலில் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளிய கவுதம் அதானி... - உலக பணக்காரர்கள் பட்டியல்

உலக பணக்காரர்கள் பட்டியலில் கவுதம் அதானி மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி 4ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

gautam-adani-overtakes-bill-gates-to-become-4th-richest-in-world

author img

By

Published : Jul 21, 2022, 2:19 PM IST

நியூயார்க்: அமெரிக்காவின் போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்ட உலகின் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் கவுதம் அதானி 4ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளியுள்ளார். பில்கேட்ஸின் சொத்துமதிப்பு 104.6 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். கவுதம் அதானியின் சொத்துமதிப்பு 115.5 பில்லியன் டாலராகும். இந்த பட்டியலில் முகேஷ் அம்பானி 90 பில்லியன் டாலர்களுடன் 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.

தொழிலதிபர் கவுதம் அதானி துறைமுகங்கள், விமான நிலையங்கள், நிலக்கரி, மின் உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில்களை செய்துவருகிறார். இதனிடையே இந்தியாவின் 5ஜி ஏலத்தில் அதானி குழுமம் கால்பதிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன. அந்த வகையில், டெலிகாம் துறையில் அதானி நுழைந்தால் அவரது சொத்துமதிப்பு மேலும் உயர வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த வாரம் பில் கேட்ஸ் தனது சொத்துக்களில் 20 பில்லியன் டாலர்களை பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குவதாக தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க் 230 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.

இதையும் படிங்க: டைம்ஸ் இதழின் 100 செல்வாக்கு மிக்கவர்கள் பட்டியல் - அதானி உள்ளிட்ட 3 இந்தியர்களுக்கு இடம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.