பாங்காக் (தாய்லாந்து): இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்கள் உட்பட பல்வேறு தரப்பினரும், இலங்கை அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதன் மீதான போராட்டம் வன்முறையாகவும் வெடித்தது. இதனிடையே இலங்கை அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே இலங்கையை விட்டு வெளியேறினார்
இவ்வாறு வெளியேறிய கோத்தபய ராஜபக்சே, அவரது குடும்பத்துடன் கடந்த ஜூலை 13 அன்று மாலத்தீவுக்குச் சென்றார். பின்னர் அங்கிருந்து ஜூலை 14 அன்று சவுதியா விமானத்தில், சிங்கப்பூரில் உள்ள ஷாங்கி விமான நிலையத்திற்கு சென்றார். அப்போது சிங்கப்பூர் அரசு, அவருக்கு 14 நாட்கள் தங்க அனுமதி கொடுத்தது.
தொடர்ந்து, ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை கோத்தபய ராஜபக்சேவின் விசாவை நீட்டித்து சிங்கப்பூர் அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் நேற்றோடு சிங்கப்பூர் விசா காலாவதியானதால், கோத்தபய ராஜபக்சே இன்று தாய்லாந்து தலைநகர் பாங்காக் சென்றார்.
இதையும் படிங்க: இலங்கையின் தற்காலிக அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் அரசியல் பாதை!