ETV Bharat / international

‘ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவா' கொண்டாட்டம் - பிரதமர் மோடி வாழ்த்து - Azadi Ka Amrit Mahotsava in US

ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவா கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் மோடி இந்திய - அமெரிக்க வாழ் சமூகத்தினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவா' கொண்டாட்டம் - பிரதமர் மோடி வாழ்த்து

author img

By

Published : Sep 15, 2022, 9:54 AM IST

வாஷிங்டன்: அமெரிக்காவில் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்ஸவாவை கொண்டாடியதற்காக இந்திய அமெரிக்க சமூகத்திற்கு பிரதமர் மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடி அனுப்பிய வாழ்த்து செய்தியில், “புலம்பெயர்ந்தோர் நமது நாட்டின் போற்றத்தக்க இந்திய தூதர்கள்.

அவர்கள் அங்கு வாழ்வதன் மூலம் இந்தியர்களின் அனைத்து கலாச்சாரங்களையும் மதித்து, தடையின்றி கலந்து, சமூகங்களை தங்கள் தனித்துவமான பங்களிப்புகளால் வளப்படுத்துகிறார்கள். 1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியாவின் பயணத்தின் வரலாற்று மைல்கல்லை காண்பதற்காக 75 இந்திய அமெரிக்க அமைப்புகள் ஒன்று சேர்ந்துள்ளன.

இந்த அமைப்புகளில் US India Relationship Council, Sewa International, Ekal Vidyalaya Foundation, Hindu Swayamsevak Sangh, GOPIO Silicon Valley, US India Friendship Council மற்றும் சனாதன் சமஸ்கிருதிக்கான சர்தார் படேல் நிதி ஆகியவை முக்கியமானவையாக உள்ளன.

நமது இரு பெரும் நாடுகளையும் பிணைக்கும் பல மதிப்புகளில், சுதந்திரத்திற்கான அன்பும் ஜனநாயக விழுமியங்களுக்கான அர்ப்பணிப்பும் மிக முக்கியமானவை. உலகின் மிகப்பெரிய மற்றும் பழமையான ஜனநாயக நாடுகளால் சுதந்திர தினம் கொண்டாடப்படுவது ஒரு அழகான தருணம்.

இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தை வெளிப்படுத்தவும், இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கலாச்சார உறவுகளை வலுப்படுத்தவும் 75 புலம்பெயர்ந்த இந்திய அமைப்புகள் ஒன்றிணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வரவிருக்கும் 25 ஆண்டுகளில் இந்தியா தனது முக்கியமான இலக்குகளை அடைய இருப்பதால், இந்தப் பயணத்தில் அமெரிக்கா ஒரு முக்கிய பங்காளியாக இருக்கும்.

இந்த கொண்டாட்டம் நமது இரு நாடுகளுக்கும் இடையேயான அற்புதமான நட்புறவில் ஒரு முக்கிய மைல் கல்லாக அமையும் என்பதில் உறுதியாக உள்ளேன். இந்தியா என்ற சொல் ஒரே நேரத்தில் பல விஷயங்களைக் குறிக்கிறது.

ஒரு நவீன ஜனநாயக குடியரசு, மாறுபட்ட நாடு, பண்டைய நாகரிகம் மற்றும் புவியியல் அல்லது காலத்தால் வரையறுக்கப்படாத கலாச்சார உணர்வு போன்றவற்றை குறிக்கிறது. ஒரே நேரத்தில் இதுபோன்ற பல பரிமாணங்கள் மூலம் இந்தியாவுடன் எவ்வாறு இணைய முடியும் என்பதற்கு உலகளாவிய இந்தியர்கள் சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளனர்.

இந்தியா 75 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. இந்த சுதந்திரம் ஒரு தனித்துவமான வழியில் வென்றது. எனவே, அமைதி மற்றும் சுதந்திரத்தின் லட்சியங்களை விரும்பும் எவருக்கும் இந்தியா உத்வேகத்தின் ஆதாரமாக உள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் நாட்டின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், இரசாயனம் மற்றும் உரங்கள் துறை அமைச்சர் மன்சுக் லக்ஷ்மன்பாய் மாண்டவியா, தனது நேரடி இணைய முகவரியில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், “இந்தியா-அமெரிக்க உறவில் இந்திய அமெரிக்கர்கள் பெரும் பங்காற்றியுள்ளனர்.

பிரதமர் மோடி மற்றும் அதிபர் ஜோ பைடன் தலைமையில் இரு தரப்பு உறவு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்தியாவின் வளர்ச்சியில் அமெரிக்கா முக்கிய பங்குதாரராக உள்ளது” என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து கூறுகையில், “இந்தியா சுதந்திரம் அடைந்ததைப் போன்றே இந்திய-அமெரிக்க உறவும் பழமையானது. சுதந்திர இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான நமது தூதரக உறவுகளை நிறுவி 75 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் தருணம் இது என்பதை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.

இதை அமெரிக்காவில் கொண்டாடுவது எனக்கு ஒரு சிறப்பான தருணம். இன்று நாம் கொண்டாடும் இந்த அருமையான உறவை உறுதிப்படுத்துவதில் காங்கிரஸ் ஒரு சிறப்புப் பங்காற்றியுள்ளது. இதை நான் கடந்த 25 ஆண்டுகளாக பார்த்து வருகிறேன்” என்றார்.

மேலும் பாஜக மூத்த தலைவர் அமன் சின்ஹா, “அமெரிக்காவில் இந்நிகழ்வை கொண்டாடிய இந்திய அமெரிக்கர்களுக்கு எனது வாழ்த்துகள். ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ் புதிய இந்தியாவின் உணர்வை உள்ளடக்கியது” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 70 ஆண்டுகளுக்குப்பிறகு இந்தியாவில் மீண்டும் சிவிங்கிப்புலிகள் - வரலாறு தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.