லண்டன்: இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இங்கிலாந்து பிரதமராக அக்.26ஆம் தேதி பதவியேற்றார். அவருக்கு உலக தலைவர்கள், தொழிலதிபர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரதமர் மோடி ரிஷி சுனக்கை செல்போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், "இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்றதற்கு ரிஷி சுனக்குக்கு வாழ்த்துகள்.
இரு நாடுகளின் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த நாங்கள் ஒன்றாக இணைந்து செயல்படுவோம்" எனப் பதிவிட்டிருந்தார். இதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் தனது ட்விட்டர் பத்தில், "எனது புதிய பதவியை தொடங்கும் போது உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி. இங்கிலாந்தும் இந்தியாவும் நல்லுறவை அதிகம் பகிர்ந்து கொள்கின்றன. வரும் நாட்களில் நாம் நாடுகளின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்துவது மூலம் ஜனநாயகம் முன்னேற்றமடையும் என்பதில் மகிழ்ச்சியடைகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிங்க: இந்திய நாட்டின் தேச பக்தர் பிரதமர் மோடி - ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின்