ETV Bharat / international

13 மணி நேரப்பயணத்திற்குப் பின் புறப்பட்ட இடத்திலேயே மீண்டும் விமானம் தரையிறங்கியதால் பயணிகள் விரக்தி!

துபாயில் இருந்து நியூசிலாந்துக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் 13 நேரம் பயணத்திற்குப் பின் மீண்டும் துபாய் விமான நிலையத்திற்கே திரும்பியதால் பயணிகள் கடும் விரக்திக்குள்ளாகினர்.

விமானம்
விமானம்
author img

By

Published : Jan 30, 2023, 8:38 PM IST

ஐதராபாத்: துபாயில் இருந்து ஆக்லாந்து சென்ற எமிரேட்ஸ் விமானம் 13 நேரப் பயணத்திற்குப் பின் மோசமான வானிலை காரணமாக மீண்டும் துபாய் விமான நிலையத்திற்கே திரும்பியதால் பயணிகள் கடும் விரக்திக்குள்ளாகினர். துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நியூசிலாந்தின் ஆக்லாந்து நகருக்கு கடந்த ஜன. 27ஆம் தேதி எமிரேட் நிறுவனத்தின் Flight EK448 என்ற விமானம் சரியாக காலை 10.30 மணிக்குப் புறப்பட்டது.

ஏறத்தாழ 4 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தை விமானம் 13 மணி நேரத்தில் கடந்த நிலையில், ஆக்லாந்து நகரில் நிலவும் மோசமான வானிலை மற்றும் கனமழை காரணமாக விமானம் மீண்டும் திருப்பி விடப்பட்டது. ஆக்லாந்து விமான நிலையத்தில் தரையிறங்குவோம் என எதிர்பார்த்து காத்திருந்த பயணிகளுக்கு மீண்டும் துபாய் விமான நிலையம் சென்றது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

கடும் விரக்தியுடன் மறுநாள் நள்ளிரவில் துபாய் விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானத்தில் இருந்து பயணிகள் கீழ் இறங்கினர். ஆக்லாந்தில் வரலாறு காணாத அளவில் பெய்து வரும் கனமழையால் விமான நிலையமே தண்ணீரில் மூழ்கி காட்சி அளிக்கிறது. விமான நிலையத்தில் தேங்கி நிற்கும் நீரை வெளியேற்றும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

  • Did you know the Auckland airport is the only airport in the world to have an immersive underwater experience in the terminal?

    Brilliant architecture! pic.twitter.com/2weSzlMSQd

    — STØNΞ | Roo Troop (@MorganStoneee) January 27, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

மேலும் ஆக்லாந்தில் அடுத்தடுத்து கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், விமான தரையிறக்கத்திற்கு தேவையான நடவடிக்கைகளை செய்து வருவதாகவும் அதிகாரிகள் கூறினர்.

இதையும் படிங்க: Pakistan blast: மசூதியில் குண்டுவெடிப்புக்கு 32 பேர் பலி.. ஆப்கான் தற்கொலைப் படை தாக்குதல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.