வாஷிங்டன்: பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபரின் அழைப்பை ஏற்று அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இன்று (ஜூன் 21) முதல் வருகிற 24ஆம் தேதி வரை அமெரிக்காவில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, நோபல் பரிசு பெற்றவர்கள், பொருளாதார நிபுணர்கள், கலைஞர்கள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் மருத்துவ வல்லுநர்கள் ஆகியோரைச் சந்திக்கிறார்.
அந்த வகையில், இன்று டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி எலான் மஸ்க்கை பிரதமர் மோடி சந்தித்தார். இந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த எலான் மஸ்க், “நான் அடுத்த வருடம் இந்தியாவிற்குச் செல்லத் திட்டமிட்டு உள்ளேன். விரைவில் இந்தியாவில் டெஸ்லா இருக்கும் என நான் நம்புகிறேன்.
அதேநேரம், அதனை சாத்தியமாக்குவதும் மிக விரைவில் நடக்க உள்ளது. தொலைதூர எதிர்காலத்திற்கான ஒரு அறிவிப்பை செய்வதில் எனக்கு நம்பிக்கை அளித்து ஆதரவாக இருக்கும் பிரதமர் மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அந்த அறிவிப்பு ஒரு துப்பாக்கியைத் தாண்டுவது போல இருக்காது.
ஆனால், இந்தியா உடனான ஒரு முக்கியத்துவம் வாய்ந்த முதலீடாக அந்த அறிவிப்பு இருக்கும். நாம் உள்ளூர் அரசாங்கத்தைப் பின்பற்ற வேண்டும். இல்லை என்றால், அது நம்மை மூடி விடும். எந்த ஒரு நாட்டின் சட்டத்தையும் நாம் பின்பற்ற வேண்டும் என்பதை சிறப்பாக கருதுகிறேன். அதனை மீறி எதையும் செய்ய முடியாது.
ஒவ்வொரு நாட்டிற்கும் பல்வேறு வகையான விதிகள் மற்றும் நெறிமுறைகள் இருக்கின்றன. எனவே, சட்டத்தின் கீழ் உறுதியான பேச்சுரிமையை வழங்க நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்” எனத் தெரிவித்தார். மேலும், எலான் மஸ்க் தனிப்பட்ட ஒரு வீடியோ பதிவையும் வெளியிட்டு உள்ளார்.
அந்த வீடியோவில், “பிரதமர் மோடி உண்மையாகவே இந்தியா மீது அக்கறை உடன் இருக்கிறார். ஏனென்றால், அவர் முக்கியத்துவம் வாய்ந்த முதலீடுகளை இந்தியாவில் மேற்கொள்வதற்கான பணிகளைச் செய்கிறார். நான் மோடியின் ரசிகன். சூரிய ஒளி மின்சாரத்தில் இந்தியா சிறப்பான முதலீட்டை வகிக்கிறது. பிரதமர் மோடி மிகவும் சிறந்தவர்” என எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
-
Great meeting you today @elonmusk! We had multifaceted conversations on issues ranging from energy to spirituality. https://t.co/r0mzwNbTyN pic.twitter.com/IVwOy5SlMV
— Narendra Modi (@narendramodi) June 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Great meeting you today @elonmusk! We had multifaceted conversations on issues ranging from energy to spirituality. https://t.co/r0mzwNbTyN pic.twitter.com/IVwOy5SlMV
— Narendra Modi (@narendramodi) June 21, 2023Great meeting you today @elonmusk! We had multifaceted conversations on issues ranging from energy to spirituality. https://t.co/r0mzwNbTyN pic.twitter.com/IVwOy5SlMV
— Narendra Modi (@narendramodi) June 21, 2023
மேலும், இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “இன்று எலான் மஸ்க்கை சந்தித்ததில் மகிழ்ச்சி. நாங்கள் ஆற்றல் முதல் ஆன்மிகம் வரையிலான பிரச்னைகளில் பலதரப்பட்ட உரையாடல்களை மேற்கொண்டிருந்தோம்” எனத் தெரிவித்துள்ளார். அதேபோல், பிரதமர் மோடியை மீண்டும் சந்தித்ததில் பெருமை அடைந்ததாக எலான் மஸ்க் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார்.
இதையும் படிங்க: Modi US visit: பிரதமர் மோடி - எலான் மஸ்க் சந்திப்பு! இந்தியாவில் டெஸ்லா கிளை?