நியூயார்க்: அமெரிக்காவின் மினசோட்டா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், வால்நட்ஸ் சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் குறித்து ஆய்வு செய்தனர். அமெரிக்காவில் உள்ள 45 வயதுக்கும் மேற்பட்ட 3,341 பேரின் உணவு பழக்க வழக்கங்கள், நோய் தாக்குதல் உள்ளிட்ட தரவுகளை பகுப்பாய்வு செய்தனர்.
அதன்படி, நாள் ஒன்றுக்கு சராசரியாக 20 கிராம் வால்நட்ஸ் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவை ஏற்படும் வாய்ப்பு மிக மிக குறைவு என தெரியவந்துள்ளது. வாட்ஸ் நட்ஸ் சாப்பிடுவதால் உடல் பருமனாவது தடுக்கப்பட்டு, பிஎம்ஐ அளவு சரியாக இருக்கும் என்றும், மெட்டபாலிசம் அதிகரிக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
ஒமேகா 3 மற்றும் ஆல்ஃபா லினோலெனிக் ஆசிட் (ALA) ஆகியவற்றை கொண்ட ஒரே நட்ஸ் வகை வால்நட்ஸ்தான் என்றும், தினமும் வால்நட்ஸ் சாப்பிட்டால், நீரிழிவு நோய் ஏற்படுவதை தடுக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வறிக்கை, பிரபல நாளிதழான டெய்லி மெயிலில் வெளியிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: எட்டு வைத்து நடத்தால் எட்டிப்போகும் கேன்சர்... ஆய்வில் புதிய தகவல்..