கொழும்பு: பொருளாதார நெருக்கடியால் இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருள்களின் விலையேற்றம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்து, அதிபர் மாளிகை முழுவதுமாக போராட்டக்காரர்களால் கைப்பற்றப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாடு சென்ற நிலையில், பதவியை ராஜினாமா செய்தார். இதற்கு முன்னதாகவே மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிருந்து விலகினார். இதைத்தொடர்ந்து, ரணில் விக்கரமசிங்கே அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு நேற்று (ஜூலை 21) பதவியேற்றார். இதையடுத்து இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்த்தனே தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் இன்று (ஜூலை 22) அதிபர் ரணில் விக்கிரமசிங்கே முன்னிலையில் தினேஷ் குணவர்த்தனே பிரதமராக பதவியேற்றார். தினேஷ் குணவர்த்தனே மூத்த அரசியல்வாதியாவார். இலங்கையில் 22 ஆண்டுகளாக கேபினட் அமைச்சராகப் பதவி வகித்தவர். அண்மையில் கோத்தபாய ராஜபக்சேவால் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டவர். குறிப்பாக கோத்தபாய ராஜபக்சேவுக்கு நெருங்கியவர்.
இதையும் படிங்க: இலங்கையின் புதிய பிரதமராக தினேஷ் குணவர்தனே தேர்வு!